| Profession | சமயம் |
|---|
கூடுவாஞ்சேரியில் சின்னம்மாள்-வரதப்பன் தம்பதியருக்கு 14.08.1911-இல் பிறந்தார். குடும்ப
வறுமை காரணமாக மூன்றாம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்டு குடும்பத் தொழிலாகிய தறி
வேலையில் ஈடுபட்டார்.
அவருக்கு ஏழோ, எட்டோ வயதில் கோலி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு பெரியவர் இவரை
கூர்ந்து கவனித்தார்.
பின்னர், அச்சிறுவனின் நிலையைக் கேட்டறிந்து, தினமும் தன் னிடம் வந்து பஜனைப் பாடல்
கற்றுக் கொண்டால் காலணா கொடுப்பதாகக் கூறினார். அப்பெரியவரே வேதாத்திரிக்கு முதல்
குருவானார். அவர் ஒழுக்கம், நற்பண்புளைப் போதித்தார். பக்தி, பஜனை என வேண்டும் அளவுக்கு
ஆன்மிகத்தைப் புகட்டினார்.
வைத்தியபூபதி எஸ்.கிருஷ்ணாராவ் இவரது இரண்டாவது குரு. அவர்தான் இவருக்கு ஆயுர்வேதம்,
சித்தா, யுனானி மருத்துவங்களைச் சொல்லிக் கொடுத்தார். தியானம், யோகா பயிற்சி அளித்தார்.
இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்தில் தேர்ந்த அறிவைப் பெற்றார்.
23-ஆம் வயதில் தமக்கையர் மகளான லோகாம்பாளைத் திருமணம் செய்துகொண்டார். நுங்கம்பாக்கத்தில்
தான் பணியாற்றும் அலுவலக கேண்டீனுக்கு தினமும் 2 படி பால் ஊற்றியும், அலுவலகத்தில்
இருந்த கழிவுத்தாள்கள், அட்டை ஆகியவற்றை கூடுவாஞ்சேரிக்கு எடுத்துவந்து, அவற்றை வைத்து
கோப்புகள் தயார் செய்து அலுவலகத்திற்கு விற்றும் சற்று வருமானத்தைப் பெருக்கினார். இந்த
வருமானத்தில் சிறிது மிச்சம் பிடித்து கூடுவாஞ்சேரியில் ரூ.600-க்கு ஒரு வீடு
வாங்கினார். பின்னர் லுங்கி விற்பனை செய்தார்.
திருமணமாகி பத்து ஆண்டுகள் குழந்தை இன்மையால் இலட்சுமி எனும் அம்மையை இரண்டாவது
திருமணம் செய்தார். பின்னும் குழந்தைபேறு இல்லை. ஏன் என்பதை தவத்தால் உணர்ந்து தன்னை
உலகிற்குத் தொண்டு செய்ய 53-ஆவது வயதில் ஒப்படைத்தார்.
வேதாந்திரி தமிழ் வழியாக நாற்பத்து இரண்டு நூல்களை உரைநடையாகவும், நான்கு நூல்களை
கவிதைகளாகவும் தந்துள்ளார். ஆங்கில வழியாக பதினைந்து படைப்புகளையும் தந்த இவர் எழுதிய
நாடக நூல் ‘அணுவிடம்’ என்பது. இவரது படைப்புகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் ஏணிப்படிகள்.
படிக்கத் தொடங்கினால் படைத்தோனும் படிப்பவனும் ஒன்றாகி நிற்கும் தகைமையுடையன. ஒவ்வொரு
படைப்பும் ஒவ்வொரு சிறப்பம்சம் வாய்ந்தவை.
வேதாத்திரி மகரிஷியின் இறைஞானத்தின் முக்கியமான மூன்று அம்சங்கள்: 1) இறைத் தத்துவம்,
2) விஞ்ஞானம், 3) வாழ்க்கை நெறிகள்.
வேதாந்திரியின் “வாழ்க வையகம்! வாழ்க் வளமுடன்!!” எனும் இந்த தாரக மந்திரம் நம் மையும்
உலகையும் பிரபஞ்சத்தையும் இனிமை யுடன் வாழவைக்கும். இறையுடன் ஒருமையான வேதாத்திரியின்
வாழ்வு 28.03.2006 அன்று முடிந்தது.