| Profession | சமயம் |
|---|
திருச்சி , சமயபுரம் கண்ணனூர், நரசிங்கமங்கலத்தில் இராமசாமிப்பிள்ளை – நாகரத்தினம்
அம்மையாருக்கு 1933-இல் பிறந்தார். இயற்பெயர் குப்புசாமி. பள்ளி, கல்லூரி ஆவணங்களில்
‘என்.ஆர்.குப்புசாமி’ என்ற பெயரே இருக்கும். 1967-இல் துறவு பூணும்போது ‘ந. இரா.
ஊரன்’ என்று மாற்றிக் கொண்டார். ‘ஊரன் அடிகள்’ என அனைவராலும் அழைக்கப்படு கிறார்.
சமயபுரம் எஸ்.கண்ணனூர், ஸ்ரீரங்கத்தில் பள்ளிப் படிப்பைப் படித்தார். திருச்சி தேசிய
கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார்.
கரந்தைப் புலவர் கல்லூரியில் வித்துவான் வகுப்பில் சேர்ந்து படித்தார். அப்போது கல்லூரியைப்
பார்வையிட வந்திருந்த திருவாவடுதுறை ஆதீனத் தம்பிரான் சுவாமிகளுக்கு அடிகளார் மீது
ஈர்ப்பு ஏற்பட்டது.
அதுபோல அடிகளாருக்கும் தம்பிரான் மீது ஈடுபாடு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக,
வித்துவான் படிப்பு முடிந்ததும் ஆதினத்தில் சேர்ந்து விடுவது என்று அடிகளார் முடிவெடுத்
திருந்தார். இதை அறிந்த பெற்றோர் கல்லூரிக்கு வந்து முதல்வரிடம் முறையிட்டு வீட்டுக்கு
அழைத்துச் சென்றுவிட்டனர். வித்துவான் படிப்பு நின்றுவிட்டது.
பொறியியல் துறையில் விருப்பமேற்பட்டு, சென்னை தனிப்பயிற்சி கல்லூரி ஒன்றில் ஓராண்டு
காலம் படித்து, சென்னை அரசாங்கம் நடத்தும் தொழில்நுட்பத் தேர்வு எழுதிச் தேர்ச்சி பெற்று,
ஸ்ரீரங்கம், திருச்சி, வேலூர் ஆகிய மூனறு நகராட்சிகளில் நகரமைப்புக் கட்டிட
இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி, ஞானமார்க்க அனுபவத்தினால் பணியிலிருந்து விலகித் துறவு
பூண்டார். 1954-இல் சமயபுரத்தில் கிராமப் பெரியோர்கள் சிலரை இணைத்துக்கொண்டு ‘ஜோதி
மன்றம்’ தொடங்கினார். மாதந்தோறும் பௌர்ணமி நாளில் மாரியம்மன் கோயில் சந்திப்பில்
சொற்பொழிவு கூட்டங்கள் நடைபெறும்.
1955-இல் தமது 23ஆவது வயதில் சமயபுரத்திலுள்ள தனது வீட்டிலேயே ‘சமரச சன்மார்க்க
ஆராய்ச்சி நிலைய’த்தைத் தொடங்கினார். 1967-இல் வடலூர் வரலாறு, இராமலிங்கரும் தமிழும்
எனும் இரு நூல்கள் வெளியிடப்பெற்றன. தொடர்ந்து வள்ளலார் இராமலிங்க அடிகள் வரலாறு,
புரட்சித்துறவி வள்ளலார், திருவைந் தெழுத்தின் திறவு, மனிதநேயமும் ஆன்ம நேயமும்,
சாதியும் மதமும் போன்ற நூல்களை வெளியிட்டார். புதுடெல்லியில் 06.03.1976 முதல்
14.03.1976 வரை ஒன்பது நாட்களில் பதினான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்நிகழ்வை
அக்கால துணை குடியரசுத் தலைவர் பி.டி. ஜாட்டி தொடங்கி வைத்தார்.
2005-இல் சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்று தமது ஆராய்ச்சி நிலையப்
பொன்விழாவில் 11 ஒப்பாய்வு நூல்களை வெளியிட்டார். திருஅருட்பா முழு மையும்
மூலப்பதிப்பு, திருஅருட்பா உரைநடைப் பகுதி, திருஅருட்பாத் திரட்டு ஆகிய மூன்று
முக்கிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். அடிகளார் படைப்புகளில் தலைசிறந்ததாக கருதப்படும்
‘அருட்பெருஞ்சோதி அகவல்’ 2014-இல் வெளிவந்துள்ளது.