எழுத்தளர்

  • சி.ஆர்.ரவீந்திரன்

    கோவை அவினாசி ஆட்டையாம்பாளையம் சிற்றூரில், ரங்கசாமி – லட்சுமியம்மாள் தம்பதியருக்கு 20.11.1945 அன்று பிறந்தார். வறுமையான விவசாயக் குடும்பச் சூழல். கோவை பூ.சா.கோ கலைக் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்று, கோவை அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் ‘டியூட்டர்’ஆகப் பணியாற்றினார். செட்டிபாளையம் ரங்கசாமி ரவீந்திரன் என்பதன் சுருக்கமே சி.ஆர்.ரவீந்திரன். இவரின் முதல் சிறுகதை ‘இரவின் பூக்கள்’ இலங்கையிலிருந்து வெளிவரும் ‘வீரகேசரி’யிலும், முதல் கவிதை ‘காலச்சுவடு’ சென்னையிலிருந்து வெளிவந்த ‘கண்ணதாசன்’ இதழிலும் அடுத்தடுத்து வெளியாகின….

  • பெரியசாமி தூரன்

    ம.ப.பெரியசாமி தூரன், ஈரோடு மாவட்டம், மஞ்சக் காட்டுவலசில் வசித்த பழனி வேலப்ப கவுண்டர் – பாவாத் தாள் தம்பதியருக்கு 26.09.1908 அன்று பிறந்தார். இயற்பெயர்: பெரியசாமி. கல்லூரி காலத்தில் ஆங்கில அரசுக்கு அடையாளம் தெரியாமலிருக்கத் தனது குலப் பெயரைப் புனைப் பெயராகக் கொண்டு எழுதினார். மொடக்குறிச்சி தொடக்கப் பள்ளியிலும், ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1926-இல் இடைநிலைக் கல்வியையும், இளங்கலைக் கணிதம் பட்டமும் பெற்றார். அப்போது பகத்சிங் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு…