| Profession | எழுத்தளர் |
|---|
ம.ப.பெரியசாமி தூரன், ஈரோடு மாவட்டம், மஞ்சக் காட்டுவலசில் வசித்த பழனி வேலப்ப
கவுண்டர் – பாவாத் தாள் தம்பதியருக்கு 26.09.1908 அன்று பிறந்தார். இயற்பெயர்:
பெரியசாமி.
கல்லூரி காலத்தில் ஆங்கில அரசுக்கு அடையாளம் தெரியாமலிருக்கத் தனது குலப் பெயரைப்
புனைப் பெயராகக் கொண்டு எழுதினார்.
மொடக்குறிச்சி தொடக்கப் பள்ளியிலும், ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை
முடித்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் 1926-இல் இடைநிலைக் கல்வியையும், இளங்கலைக்
கணிதம் பட்டமும் பெற்றார்.
அப்போது பகத்சிங் தூக்குத்தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தேர்வு எழுதவில்லை.
பின்னர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இளங்கலைத் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். பின்னர்
சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்று எல்.டி. தேர்வில் வெற்றிபெற்றார்.
சிவராமகிருஷ்ணய்யரை குருவாக ஏற்று இசைப்புலமை பெற்றார்.
கோபி, வைரவிழா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.1930-இல் கோவை,
போத்தனூர் இராமகிருஷ்ண வித்யாலயத்தின் முதல் ஆசிரியர் ஆனார். இப்பள்ளியின் விடுதிக்
காப்பாளராகவும், பின்னர் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.தனது அத்தியாவசியத்
தேவைக்கான பணத்தை மட்டுமே ஊதியம் பெற்று, அதிலும் ஏழை மாணவர்க்கு விடுதிக் கட்டணம் கட்ட
உதவி செய்தார்.
கவிதைத் தொகுதிகள்-5, சிறுகதைத் தொகுப் புகள்-6, சிறுவர்களுக்கான கவிதைத்
தொகுதிகள் – 3, உரைநடைகள்- 13, கட்டுரைத் தொகுதிகள் – 4, இசை நூல்கள்- 4, நாடகங்கள்-
7 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
‘பாரதி தமிழ்’ நூலுக்காக, சென்னை எழுத் தாளர் சங்கத்தின் ‘தங்கப் பதக்கம்’ பரிசையும்,
கலை களஞ்சியப் பணிக்காகப் பெருந்தலைவர் காமராசரின் ரூ.63,000 பரிசையும், எம்.ஏ.சி.
அறக் கட்டளையின் ரூ.10,000 பரிசையும் பெற்றார்.
‘பத்மபூஷண்’, ‘கலைமாமணி’, ‘செந்தமிழ்க் கலைச்செம்மல்’ ‘தமிழறிஞர்’ ‘இசைப் பேரறிஞர்’,
‘செந்தமிழ்ச் செல்வர்’, ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
1947-இல் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலை வராகவும், 1947 முதல் 1980 வரை 33 ஆண்டுகள்
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார். இயல் இசை நாடக மன்றம்,
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், சாகித்ய அகாதெமி, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம், அகில
இந்திய வானொலி நிலைய நிர்வாகக் குழு, சென்னை வானொலி நிலைய ஆலோசனைக் குழு,
திரைப்படத் தணிக்கைக் குழு, சென்னை கர்னாடக இசைக்கான மைய இசைக் கல்வி ஆலோசனைக் குழு,
மதுரை காமராசர் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு ஆகியவற்றில் உறுப்பினராகச்
செயலாற்றினார்.
20.01.1987 அன்று உடல் நலமின்மையால் காலமானார். இவரது நூல்கள் அனைத்தும்
நாட்டுடைமையாக்கப்பட்டன. இதற்கான தொகை ரூ.10 இலட்சத்துடன் அன்பர்களின் நண்பர்களின்
நன்கொடையும் சேர்த்து ‘பத்ம பூஷன் ம.ப.பெரியசாமி தூரன் தமிழிசை அறக் கட்டளை’ 2008-இல்
நிறுவப்பட்டுள்ளது.