ஸ்டாலின் குணசேகரன்
ஈரோட்டிலுள்ள மாணிக்கம் பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஒரு சமூகப் போராளி. சிறந்த புத்தகப் படிப்பாளி. ஸ்டாலின் குணசேகரன் பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே, தன் சொந்தக் கிராமத்தில் 32 மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவர் முன்னேற்ற சங்கம்’ உருவாக்கினார். பின்னர் இந்தியா அளவிலான ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்ற’த்திலும் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டார். 1979- 80ஆம் கல்வியாண் டில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின்மாணவர் பேர வைத் தலைவராகவும், ஈரோடு…
