| Profession | ஆர்வலர் |
|---|
ஈரோட்டிலுள்ள மாணிக்கம் பாளையம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தந்தை ஒரு சமூகப் போராளி. சிறந்த புத்தகப் படிப்பாளி.
ஸ்டாலின் குணசேகரன் பத்து வயது சிறுவனாக இருக்கும் போதே, தன் சொந்தக் கிராமத்தில் 32
மாணவர்களை ஒருங்கிணைத்து ‘மாணவர் முன்னேற்ற சங்கம்’ உருவாக்கினார். பின்னர் இந்தியா
அளவிலான ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்ற’த்திலும் தன்னை இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.
1979- 80ஆம் கல்வியாண் டில் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின்மாணவர் பேர வைத்
தலைவராகவும், ஈரோடு மாவட்டத்தின் அனைத்துக் கல்லூரி மாணவர் பேரவையின் தலைவராகவும்
தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-இல் சோவியத் நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச
மாணவர் – இளைஞர் மாநாட்டில் இந்திய மாணவர்களின் பிரதிநிதியாகப் பங்கேற்றார்.
1986-இல் விடுதலைப் போராட்ட வீராங்கனை கல்பனா, 1996-இல் நேதாஜியின் இந்திய தேசிய
இராணுவத்தில் பெண்கள் படைத் தளபதியாக பணியாற்றிய கேப்டன் லட்சுமி, மற்றும்
நூற்றுக்கணக்கான விடுதலைப் போராட்ட தியாகிகளையும் நேரில் சந்தித்து, அவர்களுடன் சில
நாட்கள் தங்கியிருந்து அவர்களின் தேச விடுதலைப் போராட்ட அனுபவங்களை கேட்டறிந்து பதிவு
செய்துள்ளார்.
‘தேச விடுதலையும் தியாகச் சுடர்களும்’, ‘வரலாற்றுப் பாதையில் (2 பாகங்கள்)’, விடுதலை
வேள்வியில் தமிழகம்’ (1200 பக்கங்கள்; 2 பாகங்கள்) ஆகிய நூல்களை பல ஆண்டுகள் உழைத்து
அரிய தகவல்களைச் சேகரித்து அரிய புகைப்படங்களுடன் தொகுத்து தாமே வெளி யிட்டுள்ளார்.
‘மெய்வருத்தக் கூலி தரும்’ இவரது வானொலி உரைத் தொகுதி. ‘வரலாற்றுப் பாதையில்’
நூலுக்கு 2007-இன் சிறந்த நூலுக்கான ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு வழங்கப்பட்டது.
‘மக்கள் சிந்தனைப் பேரவை’ அமைப்பினைத் தொடங்கி சிறப்பாக நடத்தி வருகிறார். ‘சுதந்திரச்
சுடர்கள்’ எனும் பொது தலைப்பில் மாதமொரு முறை என 15 மாதங்கள் சொற் பொழிவு
நடத்தியுள்ளார். ஈரோட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ‘பாரதி விழா’ நடத்தி வருகிறார்.
2005 முதல் ‘ஈரோடு புத்தகத் திருவிழா’வை தொடர்ந்து நடத்தி புத்தக வாசிப்பை அப்பகுதி
முழுவதும் பரவலாக்கி உள்ளார். ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத் தின்
இயக்குநராகவும் ‘உங்கள் நூலகம்’ இதழின் ஆசிரியராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஸ்டாலின் குணசேகரனின் இத்தகைய அயராத சமூகப் பணியைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள்
பல்வேறு விருதுகள், பரிசுகள், பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்துள்ளன.
குறிப்பாக, 2014-இல் கோவை கற்பகம் பல்கலைக்கழகம் இவருக்கு ‘கௌரவ டாக்டர்’ பட்டம் வழங்கிச்
சிறப்பித்தது.