டத்தோ ஹாலிதஸ்லீம்

டத்தோ ஹாலிதஸ்லீம்

Profession ஆர்வலர்

Biography

இராமநாதபுரம் அழகன்குளத்தில் அ.மு.இப்பு ராயிம் – மசுக்கா பீவி தம்பதி யருக்கு
25.12.1949 அன்று பிறந்தார். ஐந்தாவது வயதில் தந்தையின் வியாபாரம் தொடர்பாக
மலாயாவிற்குக் குடிபெயர்ந்தனர்.

தமிழகம், கல்கத்தா, கான்பூர் போன்ற பகுதிகளில் தோல் தொழில்நுட்பம் கற்றார். மலேசியாவின்
தோல் தொழில்நுட்பம் தொடர்பான முதல் நிபுணர் ஆனார். ‘ஹை பாயிண்ட்’ எனும் பிரிட்டிஷ்
முதலீட்டு நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு இயக்குநராகப் பணிபுரிந்த தஸ்லீம்,1993-இல்
அந்நிறுவனத்தின் 30 விழுக்காடு பங்கினை வாங்கினார். அத்துடன் படிப்படியாக முயற்சித்து
2000-இல் அந்நிறுவனத்தை நூறு விழுக்காடு தனதாக்கிக் கொண்டார்.

லண்டன், அமெரிக்கா உட்பட பதினாறு நாடுகளில் தனது வியாபார நிறுவனத்தை நிறுவி,
அங்கும் தொழில் துறையில் வெற்றிக்கொடி கட்டினார். பின்னர், வெளிநாடுகளில் உள்ள தனது
கட்டுமான நிறுவனங்களை உழைக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இலவசமாகவே கொடுத்து விட்டு,
தற்பொழுது வளர்ந்து வரும் துறையான இணைய பாதுகாப்புத் துறையில் தொழில் மேற் கொண்டு
வருகிறார்.

விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட ‘டாக்டர் அம்மா’ திருமதி தஸ்லீம் ஆன பின்னர் யாஸ்மின்
அம்மையாரானார். தனது வாழ்க் கையில் பல திருப்பங்களைக் கொடுத்து மிகப் பெரிய
உந்துசக்தியாக இருப்பவர் தனது ‘டாக்டர் அம்மாவே’ என்கிறார் தஸ்லீம். இத்தம்பதியருக்கு
முப்பத்திரண்டு வளர்ப்புப் பிள்ளைகள். இவர்கள் இஸ்லாம், இந்து, கிறித்துவம் என மும்மதப்
பின்புலத்திலிருந்து வந்த வர்கள்.

தனக்கு மிகவும் பிடித்த திருக்குறள் சார்ந்த நிறைய படைப்புகளைச் சேகரித்து வைத்துள்ளார்.
தனது பரம்பரைக்குரிய இருநூறு ஆண்டு களுக்கும் முற்பட்ட 250-க்கும் அதிகமான ஓலைச்
சுவடிகளை பாதுகாக்கிறார்.

மலேசியாவில் பல தமிழ்ப் பள்ளிகளை தத்தெடுத்து தரம் உயர்த்திக் கொண்டிருக்கிறார். ஒரு
லட்சியத் தமிழ்ப் பள்ளியை உருவாக்க முனைந்துள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த ஊரும், தஸ்லீம் பிறந்த ஊரும்
அருகருகில் இருப்பவை. அந்த உணர் வுடன் கலாமை பல முறை சந்தித்து உரையாடும் வாய்ப்பு
பெற்றுள்ளார். அப்போது மலேசியாவில் தமிழர்கள், தமிழ்மொழி, தமிழ்ப்பள்ளி போன்ற பல
தகவல்களை கலாமிடம் கூறியிருக் கிறார்.

தமிழுக்காகவும், தமிழருக்காகவும் பல்வேறு போராட்டங்களை நிகழ்த்தியுள்ளார். ‘சமுதாயச்
சுடர்’, ‘செந்தமிழ்ப் பரிதி’, ‘தமிழ்க் காவலர்’, ‘மலேசிய இந்தியர்களின் புரட்சித்
தலைவர்’, தமிழ்ச்சுடர்’, ‘உலக வர்த்தகர்’, ‘தமிழ்த் தொண்டர் மாமணி’, ‘கல்விச்சுடர்’,
‘செந்தமிழ்ப் பரிதி’, ‘வர்த்தகச் செம்மல்’, ‘தன்மான தமிழ்ச் சிங்கம்’ போன்ற பல விருதுகளை
வழங்கப் பெற்றுள்ளார்.