பூண்டி துளசி வாண்டையார்
தஞ்சை பூண்டியில் அ.கிருஷ்ணசாமி வாண்டையார் – பொன்னம் மாள் தம்பதியருக்கு 11.05.1929 அன்று பிறந்தார். தொடக்கக் கல்வியும், உயர் நிலைக் கல்வியும் சேலம் ஏற்காடு ‘மௌண்ட் போர்ட்’ ஆங்கிலப் பள்ளியிலும், பி.ஏ. ஆங்கிலம் சென்னை லயோலா கல்லூரியிலும் பயின்றார். இவர்தம் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட ‘பூண்டிக் கல்லூரி’யைப் பாதுகாத்து, ஏழைகளுக்கு அது பயன்படும்படி நடத்தி வருகிறார். அக்கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவ மனை ஒன்றை நிறுவியுள்ளார். 1955- இல் தஞ்சை மாவட்ட…
