| Profession | கல்வியாளர் |
|---|
தஞ்சை பூண்டியில் அ.கிருஷ்ணசாமி வாண்டையார் – பொன்னம் மாள் தம்பதியருக்கு 11.05.1929
அன்று பிறந்தார்.
தொடக்கக் கல்வியும், உயர் நிலைக் கல்வியும் சேலம் ஏற்காடு ‘மௌண்ட் போர்ட்’ ஆங்கிலப்
பள்ளியிலும், பி.ஏ. ஆங்கிலம் சென்னை லயோலா கல்லூரியிலும் பயின்றார்.
இவர்தம் குடும்பத்தினரால் தொடங்கப்பட்ட ‘பூண்டிக் கல்லூரி’யைப் பாதுகாத்து, ஏழைகளுக்கு
அது பயன்படும்படி நடத்தி வருகிறார். அக்கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள், ஆசிரியர்கள்,
பொதுமக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் மருத்துவ மனை ஒன்றை நிறுவியுள்ளார்.
1955- இல் தஞ்சை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1974- இல்
தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகப் பதவி வகித்தார். 1991-இல் தஞ்சை நாடாளுமன்றத்
தொகுதியில் வெற்றி பெற்றார். 1958- 1972இல் பாபநாசம் கூட்டுறவு நிலவள வங்கியின்
தலைவராகவும், 1964- 1969இல் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவராகவும்
செயலாற்றினார்.
1983, 1998 ஆண்டுகளில் ஏற்பட்ட தொடர் மழை, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
முகாமிட்டு மக்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்தார். நாட்டு நலத் திட்டத்தின் சார்பாக
1999-இல் நிகழ்ந்த ஒரிசா புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு 3.9 டன் எடையுள்ள ஆடைகள்,
போர்வைகள் மற்றும் இதர துணிகளைச் சேகரித்து இரயில் மூலமாக ஒரிசா முதல்வருக்கு
அனுப்பப்பட்டது. 2002-இல் கார்கில் போர் வீரர் களுக்கு ரூ.40,000 நிதி திரட்டியும்,
குஜராத் நில நடுக்கத்தின் பேரழிவுக்கு நிவாரண நிதியாக ரூ.30,000 நிதி திரட்டியும்
அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் 2004 சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
நிதியுதவியும் நிவாரணப் பொருட்களும் வழங்கப்பட்டன.
ஆன்மிகவியலாளர்கள், அரசியல் தலை வர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள், கலை ஞர்கள் என பல்வேறு
துறையினரும் ஒருசேரப் பாராட்டும் ஸ்ரீமான் பூண்டி ஐயா அவர்கள் (2004), குரல் கொடுக்கும்
வானம்பாடி (2005), மனோரஞ்சிதம் (2006), இராகபாவம் (2006), பயணங்கள் தொடரும்
(2007), இன்ப வாழ்வு (2009) ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள வாழ்க்கை வரலாற்று ஆய்வு நிறுவனம் பூண்டி ஐயாவை ‘500 உலகத்
தமிழர்களில் சிறந்த மனிதர்’ எனத் தேர்ந்தெடுத்து 1995-இல் பாராட்டுச் சான்றிதழ்
வழங்கியது. இந்திய மருத்துவக் கழக தமிழ் மாநிலப் பிரிவும் தஞ்சை மருத்துவர் சங்கமும்
இவருக்கு ‘பி.சி.ராய் விருது’ வழங்கியுள்ளன. குமுதம் ‘தஞ்சையின் 10 சிறந்த மனிதர்கள்’
என்றும், பசுமை விகடன் ‘டெல்டா வேந்தன்’ எனவும் சிறப்பித்துள்ளன. அமெரிக்க ஆண்ட்ரியூஸ்
பல்கலைக் கழகம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.