அரு. அப்பாசாமி
புதுச்சேரியில் வசித்த அருணாச்சலம் – பச்சையம்மாள் தம்பதியருக்கு 15.6.1932 அன்று புலவர் அரு.அப்பாசாமி பிறந்தார். பாகூர் மையப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயின்ற இவர் 1949-இல் தமிழ்த் தேர்விலும், 1950-இல் பிரெஞ்சுத் தேர்விலும் தேர்ச்சி பெற்று ‘செர்த்திபிக்கா’ சான்றிதழைப் பெற்றார். 1963-இல் உள்துறை மின்துறைப் பிரிவு அலுவலகப் பணியில் தினக் கூலிக்கு சேர்ந்தார். 1973-இல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காரைக்காலுக்கு மாற்றலானார். இவருக்கு சிறு வயதிலேயே இயல்பாக கல்வெட்டு ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டிருந்தது. 1978-இல் இவர் எழுதிய…
