| Profession | எழுத்தாளர், பத்திரிக்கையாளர், ஆசிரியர், பள்ளி, தமிழ் அமைப்புகள் |
|---|
பெயர்: முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ்
புனைப்பெயர்கள்: சுழல் சத்தியப்பிரியன், தமிழ் முடியரசன்
பிறந்தநாள்: 30.07.1984
கல்வித்தகுதி: B.Lit,T.P.T,M.A,B.Ed,M.Phil,Ph.D,PGDTC
கல்லூரிப் பேராசிரியர் தேசியத்தகுதி: NET-2010
இல்ல முகவரி: 2/294, முடியரசனார் தெரு,மானகிரி, மானகிரி(அ), காரைக்குடி(வ), சிவகங்கை(மா) அ.கு.எ: 630307
அலைபேசி எண்கள்: 98425 89571, 98652 33275
பணியாற்றிய பள்ளிகள்:
பிளஸ்ஸிங்ஸ் பொதுப்பள்ளி, கீரப்பாக்கம் (2005)
ஆர்.சி.உயர்நிலைப்பள்ளி, கீழஉச்சாணி (2005-2006)
புனித பால் உயர்நிலைப்பள்ளி, சருகணி (2006-2007)
மு.சித.மு.சித.செ.மேனிலைப்பள்ளி, கானாடுகாத்தான் (2007-2008)
தே பிரித்தோ மேனிலைப்பள்ளி [அரசு உதவிபெறும் பள்ளி], தேவகோட்டை. (2008 முதல் தற்போது வரை..)
எழுதியுள்ள நூல்கள்:
தமிழமுது, மேடை நமதே.., மாடல்ல மற்றை யவை..(சிறுகதை நூல்), தே பிரித்தோ மேல்நிலைப்பள்ளி, நேற்று இன்று நாளை, மாணவச் செல்வங்களே.., இஞ்ஞாசியார்-500, முடியரசனாரின் படைப்பிலக்கியக் கொள்கைகள், ஐந்தருவி, நிற்க..கற்க!
வெளிவர இருப்பவை: சுவடுகள்,ஒரு கவிதையின் கதை..
பாடநூல்கள்:
பதினொன்றாம் வகுப்பிற்கான மதிப்பீட்டுக் கல்வி (வளரும் இளமை) பாட நூலாசிரியர்
2026-2029 காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 47 இணைவுக் கல்லூரிகளில் இளங்கலை தமிழ் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவ இக்கால இலக்கியம் பகுதியில் சிறுகதை பிரிவில் இவரது சிறுகதை பாடமாக வைக்கப்பெற்றுள்ளது.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், வாசிப்பு இயக்கம் மூலம் மாணவர்கள், சக ஆசிரியர்களின் படைப்புகளை நூலாக்கம் செய்து வெளியிட்டுள்ளார்.
இதழாசிரியர் அனுபவம்: சுழல் திங்களிதழ் பொறுப்பாசிரியர்- 4 ஆண்டுகள், மதுரை மறைமாநில இயேசுசபை நடத்தும் இளமைக்கனல் மாணவர் இதழின் பொறுப்பாசிரியர் (2024 முதல்) அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டு மையம்- தேமதுரம் மின்னிதழ் – பொறுப்பாசிரியர், மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், ஆனந்த கங்கைத்தூது- ஆசிரியர் குழு குறளமுதம், இணையட்டும் இதயம், திற விழி- சிற்றிதழ்கள்- துணையாசிரியர், Britto Voice மின்னிதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்
.பணியாற்றிய பொறுப்புகள்செயலாளர் – வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றம், கல்வியாளர்கள் சங்கமத் தமிழ் வளர்ச்சிக் குழுமம்.செயலாளர், துணைத்தலைவர் – வள்ளுவர் பேரவை, காரைக்குடி.அறிவுரைஞர் – மாணவர் செயற்களம்- தமிழ்நாடு.
இவரது நேர்காணல் செப்டம்பர்-2025 ஆளுமைச் சிற்பி இதழிலும், மார்ச்-2026 கல்விடுடே இருமொழித் திங்களிதழிலும் அட்டைப்படக் கட்டுரையாக வெளியாகியுள்ளது.
கட்டுரைத் தொகுப்பு பதிப்பாசிரியராக…வீறுகவியரசர் முடியரசன் படைப்புலகம் (தேசியக் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு – 2019)வாழ்வியல் நெறியுரைக்கும் வள்ளுவம் (தேசியக் கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு – 2020)கம்பனில் புதிய பரிமாணங்கள் (பன்னாட்டுக்கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு – 2021)
இவர் பெயரில் இவரது கதாபாத்திரத்தில் இவரது பள்ளியில் படமாக்கப்பெற்ற STR கல்வித் திரைப்படம் இதுவரை 17 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இயக்குநர் – தமிழ்நாட்டரசின் சிறந்த ஆவணப்பட இயக்குநர் விருது பெற்றவர்.
சனவரி 2024 இல் கலைவாணர் அரங்கத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் நாள் விழாவில் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் சிறந்த கல்வியறிவுக்குழு ஒருங்கிணைப்பாளர் (BEST ELC NODAL OFFICER) விருது பெற்ற ஒரே பள்ளி ஆசிரியர் இவர்.
சனவரி-2025 இல் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் நடத்திய விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விழாவைத் தொகுத்து வழங்கியுள்ளார்.
விருதுகள்:
குமுதம் சிநேகிதி இதழ் வழங்கிய ‘கனவு ஆசிரியர்’ விருது, இந்தியப் பண்பாட்டு அமைப்பின் ‘சிந்தனைச்சுடர்’ விருது, காஞ்சி முத்தமிழ் மையம் வழங்கிய ‘சிறந்த எழுத்தாளருக்கான அண்ணா விருது’கல்வியாளர்கள் சங்கமத்தின் ‘சமூகச்சிற்பி’ விருது, கல்விசுடே இருமொழித் திங்களிதழின் ‘சமூக, கல்வி நற்சிந்தனையாளர்’ விருது, ஔவை தமிழ்க்கோட்டம் வழங்கிய ‘கதை ஆய்வுச் சுடர்’ விருது, தமிழிசைச் சங்கத்தின் ‘இளம் எழுத்தாளர்’ விருது, அண்ணஞ்சார் அறிவாலயத்தின் ‘அண்ணஞ்சார்’ விருது, சேலம் தமிழ்ச் சங்கத்தின் ‘கலைச்சுடர்’ விருது, மதுரை கலை இலக்கியப்பெருமன்றம் வழங்கிய ‘இலக்கியச் செல்வர்’ விருது, பன்னாட்டு அரிமா சங்கங்கள் கூட்டமைப்பு வழங்கிய ‘சிறந்த ஆசிரியர்’ விருது, வேந்தர் தொலைக்காட்சி வழங்கிய ‘சிறந்த கல்வியாளர்’ விருது, விண் நியூஸ் தொலைக்காட்சியின் ‘வழிகாட்டி’ விருது, தமிழன் தொலைக்காட்சி வழங்கிய ‘நல்லாசிரியர்’ விருது,
கலைஞர் தமிழ்ச்சங்கம் வழங்கிய ‘முத்தமிழறிஞர் கலைஞர்’ விருது, இந்து தமிழ்திசை நாளிதழின் ‘அன்பாசிரியர்’ விருது