| Profession | தமிழ் ஆராய்ச்சியாளர், ஊடகவியலாளர், பேராசிரியர், பதிப்பாளர், கல்லூரி, தமிழ் அமைப்புகள் |
|---|
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ்
கல்வித்தகுதிகள்: B.Com.,M.B.A(HRM).,M.Phil.,Ph.D.,PDF(RUSA 2.0).,RF(ICSSR)., M.Com(Finance & Control).,M.C.L(Corporate Law).,PGDM.,PGDFT.,D.Litr(USA)., Certificate Programs in (Saivasiththantham, Yoga, Computer Literacy & Tally)
அறிமுகம்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (என்கிற) முதுமுனைவர். கு. பிரகாஷ் அவர்கள் நாவண்மையும் நல்ல சிந்தனையும் நகைச்சுவை உணர்வும் கொண்டுப் பட்டிமன்றத்தை பாங்கோடு நடத்தக்கூடிய இளம் வயது பட்டிமன்ற நடுவர், சொற்பொழிவாளர், தமிழறிஞர், கல்வியாளர். தனது நகைச்சுவை உணர்வாலும் செறிவுமிக்க சிந்தனையாளும் இலக்கியங்களை எடுத்தாளுகிற ஆற்றலாலும் மிகச் சிறந்த பட்டிமன்ற நடுவராக 12 வயது முதல் இன்று வரை திகழ்ந்து வருகிறார்.
பட்டிமன்ற நடுவராக, சொற்பொழிவாளராக, கவிஞராக, ஆய்வியல் அறிஞராக, சிறப்புவிருந்தினராக, தமிழறிஞராக 3000+ க்கும் மேற்பட்ட மேடைகளை இந்த இளம்வயதில் சிறப்புச் செய்துள்ளார். பல வித்தியாசமான தலைப்புகளிலும் வித்தியாசமான கோணங்களிலும் பட்டிமன்றத்தை அமைத்து இளந்தலைமுறைக்கு தமிழ் இலக்கிய ஆர்வத்தை உருவாக்கி வருகிறார். இயல் பட்டிமன்றம், இசைபட்டிமன்றம் என பட்டிமன்றத்தை நவீன தளத்தில் நிறுத்தி அதில் அதிக அளவு இளைஞர்களை ஈடுபடவைத்தது தமிழ் இலக்கிய உலகிற்கு இவர் ஆற்றிய மிகச் சிறந்த தொண்டு. இதுவரை 350க்கும் மேற்பட்ட புதிய பேச்சாளர்களை தமிழ் உலகிற்கு அவர் அறிமுகம் செய்துள்ளார்.
இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பெயரை இலக்கியப்பித்தன் என அமைத்துக் கொண்டார். (இயற்பெயர்: முதுமுனைவர். கு. பிரகாஷ்) (புனைப்பெயர்: பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன்). இவர் பத்தாம் வகுப்பு முதல் அலைபேசியின் மூலம் திருக்குறள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி “தினம் ஒரு தமிழ்” என்ற தமிழ் சேவையை செய்து வந்துள்ளார். குறளோவியக் கழகம் என்கிற தமிழ் அமைப்பை பள்ளி பருவத்திலேயே நிறுவி “இலக்கியப் பெருவிழா” என்கிற பெயரில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை நடத்தி இலக்கிய உலகிற்கு சிறப்பு செய்துவருகிறார். “இலக்கியப்பித்தன் தமிழாய்வகம்” என்கிற தமிழ் அமைப்பையும் இவர் நடத்தி வருகிறார்.
இளம்பருவம்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) அவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ந. குமார் மற்றும் கு. செல்லம்மாள் தம்பதியினருக்கு 21.03.1991 அன்று இளைய மகனாகப் பிறந்தார். இளம்பருவத்தில் அவருக்கு கு. பிரகாஷ் என்கிற பெயர் சூட்டப்பட்டது. பள்ளிப்பருவத்தில் இருந்தே தமிழ் மீதும், பேச்சும், கவிதைகளின் மீதும் ஆர்வம் கொண்டவர். தனது பள்ளிப் பருவத்தில் ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிரியை திருமதி. அன்பரசி அவர்களின் வழிகாட்டுதலால் தமிழ் ஆர்வத்தை வளர்த்து, பட்டிமன்றத்தை நடத்துவது, கவிதை எழுதுவது, நாடகம் எழுதிப் நடிப்பது என பல பணிகளை செய்தாலும், தனது முழு ஆர்வத்தை பட்டிமன்றம் நடத்துவதிலேயே வைத்திருந்தார். சிவநெறிச்சுடர் புலவர். தி. பொன்னம்பலம் ஐயா அவர்களை சிறுவயதில் “சிதம்பரம் தமிழ் பேரவை” நிகழ்ச்சியில் சந்தித்தது இவரது வாழ்வில் ஒரு முக்கிய திருப்புனையாக அமையபெற்றது. சிவநெறிச்சுடர் புலவர். தி. பொன்னம்பலம் ஐயா அவர்களின் வழிகாட்டுலில் பேரில் பல சமய இலக்கியங்களை கற்கத்தொடங்கினார். சன்டிவியில் ஒளிபரப்பான சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றங்களைப் பார்த்து, பட்டிமன்றத்தை நடுவராக இருந்து நடத்தவேண்டும் என்கிற ஆர்வம் இவருக்கு வந்ததாக கூறுவார். சிறு வயதில் இருந்தே நடுவராகப் பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்கிற ஆர்வம் முனைவர் கு. பிரகாஷ் அவர்களை அதற்காக உழைக்கச் செய்தது. பல நூல்களைப் படிப்பதும், ஆய்வு செய்வதும், மனனம் செய்வதும், பல அறிஞர்களின் பேச்சைக் கேட்பதும் ஆக சிறு வயதில் இருந்தே தன்னை முழுமையாகச் செதுக்கிக் கொண்டார். இவரின் தாயாரின் அன்பும், அக்கறையும், தர்ம சிந்தனையும் அவரை சமூகத்தில் நல்ல மனிதனாக உருவாக்கியது. பல நேரங்களில் இவர் சந்தித்த தோல்விகளை கூட இவரின் தாயாரின் அறிவுரைகளால் வெற்றியாக மாற்றியுள்ளார்.
பள்ளி மற்றும் கல்லூரிகள்
சிதம்பரம் ஸ்ரீமத் வரவரமுனி நடுநிலைப்பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பை முடித்து சிதம்பரம் இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளியில் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பை முடித்து, அதன்பிறகு தனது இளம்வணிகவியல் படிப்பை சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியிலும் (திருவள்ளுவர் பல்கலைக்கழகம், வேலூர்), முதுநிலை மேலாண்மை மற்றும் முதுநிலை வணிகவியல் படிப்புகளை காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்திலும், முதுநிலை வணிக நிர்வாகவியல், இளமுனைவர், முனைவர், முதுமுனைவர் ஆகிய ஆய்வுப்பட்டங்களை சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக, வணிக நிர்வாகவியல் துறையிலும் முடித்தார். தன்னுடை முதுநிலை வணிக சட்டம் படிப்பை சென்னை, தமிழ்நாடு டாக்டர். அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழகத்திலும், முதுகலை தமிழ் படிப்பை திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும், முதுநிலை டிப்ளமோ மேலாண்மை படிப்பை மதுரை, காமராசர் பல்கலைக்கழகத்திலும் நிறைவு செய்தார்.
• முதுமுனைவர் பட்டம் (PDF) – (சங்க இலக்கியதில் பெருநிறுவன நடைமுறைகள்) Corporate Practices form Sangam Literature
• முனைவர் பட்டம் (Ph.D) – (பெரியபுராணத்தில் மேலாண்மை சிந்தனைகள்) Management Concepts in Periyapuranam
• இள முனைவர் பட்டம் (M.Phil.,) – பெரியபுராணத்தில் மனித வள மேலாண்மை நடைமுறைகள்) HRM Practices form Periyapuranam
தன்னுடைய இளமுனைவர் பட்டம் மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகளில் ”பெரியபுராணத்தில் மேலாண்மை கொள்கைகள்” என்கிற பொருண்மையில் ஆய்வு செய்து பெரியபுராணத்திற்கு சிறப்பை தந்திருக்கிறார். வணிக மேலாண்மை சார்ந்த ஆய்வுகளில் பெரியபுராணம் பற்றிய ஆய்வு மேற்கொள்வது இதுவே முதன்முறை, அதை நிகழ்த்தியதும் முனைவர். கு. பிரகாஷ் அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதுமுனைவர் பட்ட மேலாய்வில் சங்க இலக்கியங்களில் தொழில் முறை சிந்தனைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து அதிலும் புதுமை நிகழ்த்திய பெருமையும் இவரைச் சாரும். பெருமை மிகு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக்கழக வணிக மேலாண்மை துறையின் முதல் முனைவர் பட்ட மேலாய்வாளர் என்கிற பெருமையும் இவரையே சாரும்.
பட்டிமன்றங்கள்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலம், தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்குடி, சிதம்பரம், விருத்தாசலம், கோபிச்செட்டிபாளையம், கன்னியாகுமரி, நாகர்கோயில், பெரம்பலூர், அரியலூர், தேனி, கடலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திண்டிவனம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, திருவாரூர், விருதுநகர், விழுப்புரம், சேலம், சிவகங்கை, இராமநாதபுரம், மன்னார்குடி, காட்டுமன்னார்கோயில் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பெரு நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலும் பட்டிமன்றத்தை நிகழ்த்தியுள்ளார் மற்றும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். கோயில் நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக, நூலக நிகழ்ச்சிகள், இலக்கிய மற்றும் தமிழ் அமைப்புகளின் விழாக்கள், புத்தக திருவிழாக்கள், தொலைக்காட்சி ஊடகங்களில் சிறப்பு பட்டிமன்றங்களை நிகழ்த்தி வருகிறார். முதியோர் இல்லங்கள், மாற்றுத் திறனாளர் இல்லங்கள், திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளில், பொது நிகழ்ச்சிகளில் பட்டிமன்றத்தை நடத்தி, பட்டிமண்டபத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் வழி வகுத்து வருகிறார். தனது இயல்பான நகைச்சுவையாலும், பாடல்களாலும், சிந்தனையாளும், இலக்கிய மேற்கோள்களாலும், ஆற்றல்மிக்க அரிவுரைகளாலும், புத்தாக்க சிந்தனைகளாலும், கம்பீரக் குரல் வலிமையாலும், மேடையைக் கையாளும் ஆற்றலாலும் “கேட்டார் பிணிக்கும் தகைய வாய்” என்கிற குறளுக்கு ஏற்ப தனது ரசிகர்களை கட்டிப் போடும் திறத்தாலும், பட்டிமண்டபத்தை திறம்பட நடத்தி வருகிறார்.
இன்னிசை பட்டிமன்றம்
பட்டிமன்றத்தில் இன்னிசையை இணைத்து அதன் பெருமைக்கு மேலும்சிறப்பு சேர்க்கிற வடிவம் “இன்னிசை பட்டிமன்றம்”. இதை தமிழகத்தில் மிகச் சிறப்பாக நடத்துவதில் முதுமுனைவர். கு. பிரகாஷ் (டாக்டர். இலக்கியப்பித்தன்) தனித்துவம் பெற்ற விளங்குகிறார். திரையிசை பாடல்களா? தெம்மாங்கு பாடல்களா? என தொடங்கி ஆறு தலைப்புகள், எட்டு தலைப்புகள் என அதிக அளவு தலைப்புகளில் பட்டிமன்றத்தை நடத்தி, மக்களுக்கு இயல் பட்டிமன்றம், இன்னிசை பட்டிமன்றம் இவற்றின் மீது அதிக அளவு ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். முன்னை பழமைக்கும் பழமையான விடயங்களையும் புத்தம் புதிய சிந்தனை உடைய நவீன விடயங்களையும் கொண்டு இன்னிசை பட்டிமன்றத்தை சிறப்புடன் நடத்திவருகிறார்.
சொற்பொழிவுகள்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்), தனக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகவும், இலக்கிய தரத்தோடும், சிந்தனைக்குரிய செய்திகளை புதிய பார்வையுடன் சொற்பொழிவு செய்வதில் வல்லவர் என தமிழக மக்கள் இவரைப் பாராட்டுவது உண்டு. சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் பல முறையும், சிதம்பரம் நடராஜர் கோயிலில் பலமுறையும், இராகவேந்திரர் அவதரித்த புவனகிரி மிருத்திகா பிருந்தாவன கோயிலில் பலமுறையும், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் பலமுறையும் மற்றும் உசுப்பூர் கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பல திருக்கோயில்களில் ஆன்மீக சொற்பொழிவுகளையும், திருச்சி, தேசிய தொழில் நுட்பக்கழகம் (என்.ஐ.டி திருச்சி), சாஸ்த்ரா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், சவீதா பல்கலைக்கழகம், ஜேப்பியார் பல்கலைக்கழகம், கற்பகம் பல்கலைக்கழகம் மற்றும் தான் படித்த இராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளி, தமிழகத்தின் பிரபலமான பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சிறப்பு நகைச்சுவை சொற்பொழிவுகளையும், சிறப்பு பட்டிமன்றங்களையும் நிகழ்த்திவருகிறார். பள்ளி, கல்லூரி, புத்தக திருவிழா மற்றும் நூலகங்களில் இலக்கிய மன்ற விழாக்களிலும் சிறப்பு இலக்கிய சொற்பொழிவுகளையும் நிகழ்த்தி வருகிறார். மேலும் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களின் வணிகவியல் துறை, நிர்வாகவியல் துறை, மேலாண்மையியல் துறை, பொருளியல் துறை, ஆங்கிலத்துறை, தமிழியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பாக நடைபெறும் உள்நாட்டு / பன்னாட்டு கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் சிறப்பு விருந்தினராகவும், வள நபராகவும், ஆய்வறிஞராகவும் சிறப்பு செய்துள்ளார். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), ஆற்றல் மேலாண்மை (Energy Management) மற்றும் மென் திறன்கள் (Soft Skills) ஆகியவை குறித்த இவரின் சிறப்புரை மற்றும் சிறப்பு சொற்பொழிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
உலகலாவிய தமிழ் பங்களிப்புகள்
2024ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள (தமிழ்) பள்ளி குழந்தைகளுக்காக சிகாகோ தமிழ் சங்கம் நடத்திய திருக்குறள் வாழ்வியல் பயிற்சி பட்டறை நிகழ்ச்சியில் திருக்குறள் சொற்பொழிவை நிகழ்த்தி சிறப்புசெய்துள்ளார்.
2023ம் ஆண்டு வங்காளதேசத்தின் “டாக்கா சர்வதேச பல்கலைக்கழகத்தின்” துணைவேந்தர் பேராசிரியர்.டாக்டர்.சைபுல் இஸ்லாம், அவர்களிடமிருந்து “சிறந்த இளம் பேராசிரியருக்கான விருதை” பதினொன்றாவது சர்வதேச வணிகவியல் மாநாட்டில் பெற்றார்.
2023ம் ஆண்டு மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற 11-வது உலகத்தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு மிகச்சிறந்த ஆய்வுரைகளை வழங்கியது இவரின் தனிச்சிறப்பு.
2020ம் ஆண்டு குவைத், பாலைவன சொல்வேந்தர் பேரவை நடத்திய சிறப்பு பட்டிமன்றத்தில் நடுவராக கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.
2018ம் ஆண்டு சுவிஸ்லாந்து நாட்டில் இயங்கி வரும் பிரபல தமிழ் இணையதள பத்திரிக்கை ஊடகமான “புதியஉதயம்” கட்டுரைத் தொகுப்பில் “தமிழ் இலக்கிய உலகிற்கு சிறந்த வழிகாட்டி-நகைச்சுவைத்திலகம் இலக்கியப்பித்தன்” என்கிற தலைப்பில் முழுமையான கட்டுரையை வெளியிட்டு இவரை சிறப்புசெய்தது.
2018ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மெரிலாண்டு மாகாண சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் இவரின் இலக்கிய பணிகளை பாராட்டி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பு சேர்த்தது.
2010ம் ஆண்டு கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற முதலாம் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புசெய்த பெருமைக்குரியவர்.
தொலைக்காட்சி பட்டிமன்றங்கள்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த ராஜ் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி, விண் தொலைக்காட்சி, ஐ தொலைக்காட்சி, பெப்பர்ஸ் தொலைக்காட்சி, ஆரா தொலைக்காட்சி, யெஸ் தொலைக்காட்சி உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளிலும், மேலும் பத்ராஸ் (பட்டுக்கோட்டை), சிகரம் (புதுச்சேரி), ஏடிஏன் (சிதம்பரம்) என சில உள்ளூர் தொலைக்காட்சிகளின் சிறப்பு நிகழ்ச்சிகளில் பட்டிமன்றத்தை நடத்தி மக்கள் மனதில் நல்லதொரு இடத்தை பிடித்துள்ளார். கேப்டன் தொலைக்காட்சியின் பேச்சரங்க நிகழ்ச்சியின் தேர்வுக் குழு தலைவர் ஆகவும், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் ஜெயா தொலைக்காட்சி, ராஜ் தொலைக்காட்சி, இமயம் தொலைக்காட்சி, கேப்டன் தொலைக்காட்சி, யெஸ் தொலைக்காட்சிகளில் சிறப்பு சொற்பொழிவுகளையும் நிகழ்த்தியுள்ளார்.
ராஜ் தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பட்டிமன்றங்களில் நடுவராக சிறப்புச் செய்துள்ளார். தினமும் காலை மற்றும் மாலை நிகழ்ச்சிகளிலும் சிறப்புப் பணியாற்றுகிறார். மக்கள் தொலைக்காட்சியில் காலை 07.30 – 07.38 மணிக்கு கந்தர் அநுபூதி பாடலுக்கு விளக்கம் அளிக்கிறார். மாலை 05.32 – 05.37 மணிக்கு “எண்ணும் எழுத்தும்” என்னும் தலைப்பில் உரை நிகழ்த்துகிறார்.
விருதுகள் மற்றும் பட்டங்கள்
அமெரிக்காவின் மெரிலாந்து மாநிலத்தில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் இவரின் பட்டிமன்ற நடுவர் பணியும், சொற்பொழிவுகளும், ஆய்வுப் பணிகளும் பாராட்டி வழங்கிய “கௌரவ டாக்டர் பட்டம்”
திருவாடுதுறை ஆதீனம் வழங்கிய “சைவசித்தாந்த ரத்தினம்” & “சைவசித்தாந்த நன்மணி” பட்டங்கள்
பரங்கிப்பேட்டை நூலக வாசகர் வட்டம் வழங்கிய “நகைச்சுவை தென்றல்” & “நகைச்சுவைத் திலகம்” பட்டங்கள்
உலகத் தமிழ்கழகம், கடலூர் வழங்கிய “தமிழ்ப்பாவாணர் விருது”
சென்னை சவீதா பல்மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வழங்கிய “பட்டிமன்ற மார்க்கண்டேயன்” பட்டம்
பாளையங்கோட்டை தூய இதயமேநிலைப் பள்ளி நிர்வாக ஆசிரியர்கள் வழங்கிய “வார்த்தைச் சித்தர்” பட்டம்
அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை வழங்கிய “கலாம் ஆளுமை” விருது
விகாஸ் கல்வி நிறுவனம் வழங்கிய “சிறந்த இளம் பேராசிரியருக்கான விருது”
தூய வளனார் கலை & அறிவியல் கல்லூரி (த) கடலூர், “காப்பியக்களஞ்சியம்” & “பண்பாட்டுக் களஞ்சியம் விருது”
சிதம்பரம் ஆகாஸா அறக்கட்டளை வழங்கிய “ஆகாஸா வளர்கலை வேந்தர்” விருது & “பேச்சாற்றல் சிகரம்” பட்டம்
இவை பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) அவர்களின் கல்விப்பணி, இலக்கியப்பணி, பேச்சாற்றல், நகைச்சுவை உணர்வுக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் கிடைத்த அங்கீகாரங்களாகும் இவரின் சொற்பொழிவுகள் மற்றும் பட்டிமன்றங்களை இலங்கை ஜெயராஜன், மதுக்கூர் இராமலிங்கம் உள்ளிட்ட பல தமிழ் அறிஞர்களும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன், முன்னாள் அமைச்சர் உபயத்துல்லா, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்ட அமைச்சர்கள் பெருமையாகப் பாராட்டியுள்ளனர்.
ஆய்வுகள் மற்றும் கட்டுரைகள்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) தொடர்ந்துப் பல ஆண்டுகளாக இலக்கிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். “சஞ்சிகை” என்னும் சிற்றிதழுக்காக தொடர்கட்டுரைகளை புதிய கோணத்தில் எழுதிப், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். எழுத்தாளர் ரமணி சந்திரன், கம்ப ராமாயணம், சங்க இலக்கியங்கள் பற்றிய இவரது ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை. மேலும், வணிக மேலாண்மைத் துறையில் இவரெழுதிய ஆய்வுக் கட்டுரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. “பெரியபுராணத்தில் மனிதவள மேலாண்மை” என்னும் இவரது ஆய்வுக் கட்டுரை மிகவும் சிறப்பும் தனித்துவமானதாகும். “பெரியபுராணத்தில் மேலாண்மை தத்துவங்கள்” என்கிற இவரின் முனைவர் பட்ட ஆய்வும் மிகவும் சிறப்பிற்குரியது மேலும் இவரின் தொடர்கட்டுரைகள் நம்மாழ்வாரின் வேளாண் சிந்தனைகள் பற்றியும், சங்க இலக்கியங்களில் நிர்வாகவியல் சிந்தனைகள் பற்றியும் இடம் பெற்றுள்ளன.
சமூகவலைதளங்கள்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) சமூகவலைதளங்களில் இலக்கியப்பித்தன் என்னும் பெயரில் அவரின் இலக்கியப் பங்களிப்புகள் மிகவும் முக்கியத்துவமானதாகும். இலக்கியப்பித்தனின் பிரத்தியேக இணையதளம், முகநூல் பட்டிமன்றம், சொற்பொழிவு பதிவுகள், யூடியூபில் பட்டிமன்றம், சொற்பொழிவு காணொளிகள், ட்விட்டர் பதிவுகள், வலைப்பூக்கள் பதிவுகள், கட்டுரைகள், லிங்க்டின் பக்க தகவல்கள், இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், முகநூல் பக்கங்கள் மற்றும் தகவல்கள், சவுண்ட் கிளவுட் ஒலிப்பதிவுகள், திரெட் பதிவுகள், வாட்ஸ்அப் நிலைத் தகவல்கள் இவரின் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
புதிய பாதை
பட்டிமன்றம் என்கிற கலை இலக்கிய வடிவம் படித்தவர்கள் மட்டுமே, பேராசிரியர்கள் மட்டுமே, பெரியவர்கள் மட்டுமே பேச முடியும் என்கிற நிலையை மாற்றி, அதை இளைஞர்களால் நடத்த முடியும் என்கிற புதிய பாதையை உருவாக்கி பட்டிமண்டபத்தை நவீன முறையில் இளம் தலைமுறைக்குக் கொண்டுச் சேர்த்த பெருமை பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) சாரும். நூற்றுக்கணக்கான (300+) இளைஞர்களை பட்டிமன்ற உலகிற்குப் பரிச்சயம் செய்து, அவர்களால் பட்டிமன்ற உலகத்தில் பயணிக்க முடியும் என்கிற ஆர்வத்தையும் வழிகாட்டுதலையும் செய்து, பட்டிமன்ற உலகிற்கு புதிய பாதையையும், புதிய உத்வேகத்தையும் பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) வழங்கியுள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
நவீன சமூகத்திற்கு சொல்ல வேண்டிய பல செய்திகளை பட்டிமன்றம், சொற்பொழிவுகளின் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைச் செய்து, சமூகத்திற்கு பல முன்னுதாரண நிகழ்ச்சிகளைச் செய்து வருகிறார். கலை, இலக்கியம், பண்பாடு, இளைஞர்கள் வளர்ச்சி, ஒழுக்கம் சார்ந்த அறிவு, பாலியல் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் மேம்பாடு, சுதேசியம், தேசப் பற்று, திறன் வளர்ப்பு பயிற்சி, மொழிசார் வகுப்புகள், மேலாண்மை சித்தாந்த வகுப்புகள், பக்தி இலக்கிய வகுப்புகள், சமய சொற்பொழிவுகள், இலக்கிய ஆய்வுக் கூட்டங்கள் என சமூக வளர்ச்சிக்கு பயன் தரும் நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.
தமிழ் தொண்டு
உலகப்புகழ் பெற்ற பட்டிமன்ற நடுவராக திகழும் பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்), தனது பேச்சை சமூக வளர்ச்சிக்கான ஆயுதமாக பயன்படுத்தி மக்களுக்கு நகைச்சுவை மூலம் நல்ல கருத்துகளை வழங்கி வருகிறார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில் கலந்துகொண்ட இளம்வயது தமிழ் அறிஞர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. சிறுவயதில் இருந்தே திருக்குறள், திருப்புகழ், பெரியபுராணம், கம்பராமாயணம், திவ்யபிரபந்தம், சைவசித்தாந்த நூல்கள், கண்ணதாசனின் இலக்கியங்களை கற்று அதில் முழு ஆர்வம் உடையவராக திகழ்ந்து வருகிறார். மேலும்சங்க இலக்கிய, பக்தி இலக்கிய ஆய்வுகளை பலவற்றை நிகழ்த்தி வருகிறார். மேலும் சிதம்பரத்தில் “குறளோவியக்கழகம்” மற்றும் “இலக்கியப்பித்தன் தமிழாய்வகம்” என்கிற தமிழ் அமைப்புகளை நிறுவி பல அறிஞர்களை பேசி, பலருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறார். வருங்கால தமிழ் இலக்கிய உலகிற்குச் சிறந்த வழிகாட்டியாகவும், போற்றப்படும் தமிழ் அறிஞராகவும் விளங்கும் இவர் இளைஞர் என்பதும் இவரின் பெருமைக்கு கூடுதல் சிறப்பு. கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் ஆக பணியாற்றிய இவர், மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் விதமாக உதவிகள் செய்வதையும், அறிவூட்டுவதையும், வாழ்க்கைக்கு வழிகாடுவதையும் தன்னால் இயன்ற அளவிற்கு எதிர்பார்ப்பின்றி செய்துவருகிறார். பல்வேறு கருத்தரங்க பட்டிமன்ற நிகழ்வுகளை நிகழ்த்தி, மாணவர்கள் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறார்.
கல்வியாளர் மற்றும் தமிழறிஞர்
பேராசிரியர். டாக்டர். இலக்கியப்பித்தன் (முதுமுனைவர். கு. பிரகாஷ்) ஒரு புகழ்பெற்ற கல்வியாளரும், தமிழறிஞரும் ஆவார். இவரது கல்வித் துறைப் பணி மட்டுமல்லாமல், தமிழ் இலக்கியத்தில் இவரது பங்களிப்பும் சிறப்பம்சமாக விளங்குகின்றது. வணிக மேலாண்மை துறையில் தன்னைச் சிறப்பித்த இவர், தமிழில் பாரம்பரியமான இலக்கிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தனது கல்வித் துறையிலும், இலக்கிய உலகிலும் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தி, இளைஞர்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவரின் மாணவர்கள் கல்வி, கலை, இலக்கியம் மற்றும் பல துறைகளில் உயர்வடைய வேண்டும் என்ற எண்ணத்தில், தொடர்ந்து பல்வேறு கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள் ஆகியவற்றை நடத்தி வருகிறார். தமிழறிஞராக, தமிழ் இலக்கியங்கள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், சைவ சித்தாந்தம், கம்பராமாயணம் ஆகியவற்றில் இவரது ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை. மேலும், இவர் உலகம் முழுவதும் தமிழறிஞர்கள் மத்தியில் பாராட்டப்படுபவர். புதுமையான ஆய்வுகள், நம்மாழ்வாரின் சிந்தனைகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் மீது ஆர்வம் கொண்டு, பழமை மற்றும் புதுமைக்கு பாலமாக செயல்படுகிறார்.