Moovalur Ramamirtham Ammaiyar

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள்

Profession சமூக ஆர்வலர்

Biography

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் திருவாரூர் மாவட்டம் மூவலூரில் பிறந்த ராமாமிர்தம் அம்மாள், தமிழகத்தின் மிக முக்கியப் பெண் விடுதலைப் போராளி மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். தேவதாசி என்ற பெயரில் பெண்கள் சுரண்டப்படுவதைக் கண்டு, அந்த அவல நிலையை ஒழிக்கத் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து, பெண்கல்வி மற்றும் விதவை மறுமணத்திற்காகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். இவரின் சமூகப் பங்களிப்பைப் பெருமைப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு ஏழைப் பெண்களின் திருமண நிதியுதவித் திட்டத்திற்கு ‘மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் நினைவு நிதியுதவித் திட்டம்’ என்று பெயரிட்டுச் சிறப்பித்துள்ளது. [7]{.mark} தர்மாம்பாள் தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் பிறந்த தர்மாம்பாள், சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் சிறந்த சித்த மருத்துவர் ஆவார். பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணங்களை ஆதரித்துச் சமூகப் பணியாற்றினார். தமிழ் மொழி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் நலனுக்காகப் போராடியவர். குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதை எதிர்த்து ‘இலவு வாரம்’ என்ற போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். ஈ.வெ.ரா அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும் வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரை ‘வீரத் தமிழன்னை’ என்று தமிழகம் போற்றுகிறது.