| Profession | விஞ்ஞானி |
|---|
கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் எர்ணாகுளத்தில் பிறந்தாலும் சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றுத் தன் அறிவியல் பயணத்தைத் தொடங்கியவர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன். இவர் இஸ்ரோ (ISRO) அமைப்பின் ஒன்பதாவது தலைவராகச் செயல்பட்டு, இந்தியாவின் மிக முக்கிய புவி கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை (IRS & INSAT) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினார். இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை (NEP 2020) வடிவமைத்த குழுவின் தலைவராகவும் செயல்பட்டார். நாட்டின் விண்வெளி மற்றும் கல்வித்துறைக்கு ஆற்றிய உன்னத சேவைகளுக்காக இவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.