Kalki Krishnamurthy

கல்கி கிருஷ்ணமூர்த்தி

Profession எழுத்தாளர்

Biography

கல்கி (9 செப்டம்பர் 1899 – 5 டிசம்பர் 1954) இயற்பெயர் இரா. கிருஷ்ணமூர்த்தி.

கல்கி 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி மயிலாடுதுறை பட்டமங்களத்தில் ராமசாமி – தையல்நாயகி இணையாருக்கு பிறந்தார்.

1921-இல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார்.

1922-இல் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

1923-இல் நவசக்தி பத்திரிகையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

1931 முதல் 1941 வரை ஆனந்த விகடன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் 1941-இல் ‘கல்கி’ பத்திரிகையைத் தொடங்கினார்.

1927-இல் அவரது முதல் நூலான “ஏட்டிக்குப் போட்டி” வெளியானது. தொடர்ந்து 35-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது படைப்புகள் பின்னர் நாட்டுடைமையாக்கப்பட்டன.

தமிழிசை வளர்ச்சிக்காக கல்கி, சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பணியாற்றினார்.

அவரது புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” புதினம் பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக வெளியானது. “தியாகபூமி” புதினமும் திரைப்படமாக எடுக்கப்பட்டது.