Dr. S. Muthulakshmi

முனைவர் சு. முத்துஇலக்குமி

Profession தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், பேராசிரியர்

Biography

முனைவர் சு. முத்துஇலக்குமி அவர்கள் சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். காந்திய இலக்கியத்தில் அக்கறை கொண்டவர். மதுரை, அரசு மீனாட்சி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும் நிலக்கோட்டை, இராமநாதபுரம் அரசினர் பெண்கள் கலைக் கல்லூரியில் முதல்வராகவும் இருந்து, நிருவாகத்தில் சிறந்து விளங்கியவர்.
பணி ஓய்வு பெற்ற பின் தமிழ்நாடு காந்திய நினைவு நிதி, காந்திய சிந்தனைக் கல்லூரியில் மதிப்புறு முதல்வராக இருந்து பல கல்லூரிகளில் காந்திய சிந்தனை வகுப்புகள் நடப்பதற்கு, பேராசிரியர்களைக் கண்டு பேசி, அவர்களை இந்தப் பணியில் ஈடுபட ஊக்குவித்ததோடு, காந்திய நூல்களை எழுதுவதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து அவர்கள் எழுதிய பல நூல்களை காந்தி 150ஆவது ஆண்டின் போது வெளியிடுவதற்குப் பெருமுயற்சி செய்து பணியாற்றியவர்.
வாசகர்கள் வானொலி ஒலிபரப்பில் இவர் பங்களிப்புச் செய்த இலக்கிய உரைகளையும் புத்தகப் பகிர்வு குறித்த தகவல்களையும் ‘வானொலி வானில்’ என்ற நூலாக வெளியிட்டிருக்கிறார். சாண்டில்யன் நெடுங்கதைகளில் பெண்மை, மானுடம் தழைக்க, இலக்கு – பகிர்வு – படைப்பு, கோட்பாடுகளில் காந்தியம், இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். 5க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்டிருக்கிறார்.