| Profession | தமிழ் ஆராய்ச்சியாளர், பேராசிரியர், கல்லூரி, தமிழ் அமைப்புகள் |
|---|
தமிழ் இனணப் பேராசிரியர் தமிழில் மிகுதியான ஆராய்ச்சிக் கட்டுரைகளை மிகுந்த முனைப்போடு எழுதி வருபவர் இவர் 20 முனைவர் பட்ட ஆய்வாளர்களை உருவாக்கி உள்ளார் இவர் தற்பொழுது சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சிக் கல்லூரியில் பணிபுரிந்து வருகின்றார். இவர் 25 நூல்களை வெளியிட்டுள்ளார் இவரின் நெஞ்சொடு கிளத்தல் உளவியல் நோக்கு என்ற நூல் இந்தியக்குடியரசுத் தலைவர் அரசின் இளம் அறிஞர் விருதினனப் பெற்றுள்ளது இவர் முத்தமிழ்ப்பதிப்பகம் வாயிலாக 150க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். 200க்கும் மேற்பட்ட பன்னாட்டு தேசிய அளவிலானகருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரை வழங்கியுள்ளார் இவரின் கட்டுரைகள் தினமணி தமிழ் இந்து முதலான தின இதழ்களில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிக்கின்றன. தமிழ் ஆய்வுகள் குறித்து நுட்பமாகவும் திட்பமாகவும் சிந்தித்து மலேசியா சிங்கப்பூர் இலங்கை போன்ற நாடுகளிலும் தமிழகம் பிறமாநிலங்களிலும் தனது ஆழ்ந்த சிந்தனையை கல்லூரி பல்கலைக்கழகங்களில் முன்னெடுத்து வருகின்றnர் இவரின் ஆய்வுச் செயல் பாடுளை அறிந்த தமிழக அரசு இளந்தமிழ் ஆய்வாளர் என்ற விருதினை வழங்கி பெருமை சேர்த்துள்ளது. சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் என்ற அமைப்பு ஆய்வுச் செம்மல் என்ற விருதினை வழங்கி உள்ளது. இவரின் தமிழ்ச் செயல்பாடுகளை அறிந்த பல்வேறு அமைப்புகள் 20க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளன 25க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளை நிகழ்த்தி அதனை நூலாக்கம் செய்துள்ளார் பல்கலைக்கழக நிதி நல்கையின் கீழ் ௹705000 பெற்று தென் மாவட்ட ஊர்ப்பெயராய்வு என்ற பெருந்திட்டப்பணியினை நிறைவேற்றியுள்ளார் 200க்கும மேற்பட்ட பன்னாட்டு அளவிலான திங்கள் வட்டத் தொடர்ச்சி தும்பை ஆய்வுக் கள நிகழ்வினை வாரந்தோறும் இணையவழியில் நிகழ்த்தி வருகின்றார் பல்வேறு நிதி நிறுவனங்களின் நிதிஉதவியுடன் பயிலரங்கு பயிற்சிப்பட்டறை கருத்தரங்கு எனத்தொடர்ச்சியாக இயங்கி வருகின்றார். .25. ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர் ..பல்கலை தன்னாட்சிக்கல்லூரி மாணவர்களுக்கு முனைவர பட்ட புறநிலைத் தேர்வாளராக இருந்து வருகின்றார் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன நிதியில் பத்துப்பாட்டும் இலக்கிய மரபுகளும் பண்பாட்டு நோக்கில் பத்துப்பாட்டு முதலான பயிலரங்குகளை நிழ்த்தியுள்ளார் தமிழுக்காகவும் தமிழ் மொழிக்காகவும் தன்னை அர்ப்பணித்து வருகின்றார் அண்மையில் கனடா தொல்காப்பிய மன்றம் இவரின் தொல்காப்பிய அகத்தினணயியல் புறத்திணையியல் காட்டும் வெளிப்பாட்டு நெறிகளும் புதிய மரபுகளும் என்ற ஆய்வுக் கட் டுரையைச் சிறந்து கட்டுரையாகத் தேர்வு செய்துள்ளது இவரின் பாவேந்தரில் பாரதி என்ற நூல் பல விருதுகளைப் பெற்றுள்ளது