| Profession | சமூக ஆர்வலர் |
|---|
தர்மாம்பாள் தஞ்சாவூர் மாவட்டம் கருந்தட்டாங்குடியில் பிறந்த தர்மாம்பாள், சமூகச் சீர்திருத்தவாதி மற்றும் சிறந்த சித்த மருத்துவர் ஆவார். பெண்கல்வி, விதவை மறுமணம் மற்றும் கலப்புத் திருமணங்களை ஆதரித்துச் சமூகப் பணியாற்றினார். தமிழ் மொழி மற்றும் தமிழ் ஆசிரியர்களின் நலனுக்காகப் போராடியவர். குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டதை எதிர்த்து ‘இலவு வாரம்’ என்ற போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டார். ஈ.வெ.ரா அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டத்தையும், தியாகராஜ பாகவதருக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தையும் வழங்கிய பெருமை இவருக்கு உண்டு. இவரை ‘வீரத் தமிழன்னை’ என்று தமிழகம் போற்றுகிறது.