| Profession | சமூக ஆர்வலர் |
|---|
அயோத்திதாசப் பண்டிதர் சென்னையில் பிறந்த அயோத்திதாசப் பண்டிதர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடிய ஆரம்பகால சமூகப் போராட்டவாதி, மருத்துவர் மற்றும் இதழாளர் ஆவார். சாதியற்ற திராவிடர் என்ற அடையாளத்தை முதன்முதலில் முன்வைத்தவர் இவரே. 1907-ஆம் ஆண்டு ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற வார இதழைத் தொடங்கி, அதன் மூலம் சமூக நீதி, கல்வி மற்றும் சமத்துவச் சிந்தனைகளைப் பரப்பினார். ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். தமிழகத்தின் தலித் இயக்கங்களுக்கும், சமூக விழிப்புணர்வுக்கும் இவருடைய சிந்தனைகளே மிக முக்கிய வழிகாட்டியாக அமைந்தன.