| Profession | எழுத்தாளர் |
|---|
எழுத்தாளர் குறிப்பு
முனைவர் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி தஞ்சையில் வசிப்பவர். பெண்களின் மேம்பாட்டிற்காக உரிமைக்காகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருபவர்.
கல்வித்தகுதி
தஞ்சை மருத்துவக் கல்லூரியில் செவிலியர் பட்டம் பெற்றவர். தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் நிறைஞர், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பாரதிதாசன் பல்கலைக் கழகம் மகளிரியல் துறையில் வாழ்க்கை மேம்பாட்டுத் திறன் பட்டம் பெற்றவர்.
விருதுகள் –
1996 – இல் குமுதம் நடத்திய கவிதைப் போட்டியில் “நாளை நான் வருவேன்” என்ற இவருடைய கவிதை முதல் பரிசைப் பெற்றது. · புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் விருது – 2020 · தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விருது – 2020 · தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை – மக்கள் கவி இன்குலாப் படைப்பூக்க மேன்மை விருது -2021 · புலவர் ம.துரையரசனார் – வைராம்பாள் நினைவு அறக்கட்டளை – சாதனை மகளிர் விருது 2021 · சௌமா இலக்கிய விருது (தூர் –சிறுகதைத் தொகுப்பு) – 2021 · திருப்பூர் சக்தி விருது (பெண் எழுத்தாளர்) – 2023 · எழுத்தாளர் லலிதா நினைவு அறக்கட்டளை விருது – சிஸ்டர் சிறுகதைக்காக) – 2023 · ஜி. நாகராஜன் நினைவு இலக்கியச் சிற்பி விருது –தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை – 2023 பாவேந்தர் பாரதிதாசன் விருது – 2024, களரி இலக்கியக் களம் -2023- “வனதாரி” கவிதைத் தொகுப்பு முதல் பரிசு, எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி அறக்கட்டளை – 2024 இல் சிறந்த சிறுகதை – “தொடர்பு எண் 1098” , 2025 இல் தஞ்சை பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி வழங்கிய ” இலக்கியச் செம்மல் விருது, 2026 இல் கானல் அமீரகத்தின் உலகளாவிய சிறுகதைப் போட்டியில் “மேய்ப்பரின் மிதிவண்டி” சிறுகதை மூன்றாமிடம் பெற்றது.
2026 இல் சிறுகதைக்காக புதுக்கோட்டை
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் எழுத்தாளர் செம்பை மணவாளன் நினைவு விருது, 2026 இல் தஞ்சை மாவட்டம் திருக்கருகாவூர் அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை எழுத்துப் பணி மற்றும் சீரிய முறையில் இலக்கியத் தொண்டாற்றி வருவதற்காக கல்விக்காவலர் பூண்டி ஐயா நினைவு விருது. 2026 – தஞ்சை மருதுபாண்டியர் கல்வி நிறுவனம் வழங்கிய சிறந்த மகளிர் இலக்கியச்
செயல்பாட்டிற்கான விருது.
வெளியிட்ட நூல்கள்
“நீயில்லாத பொழுதுகள்” – கவிதைத் தொகுப்பு – ஜூலை.2011 – அன்னம் அகரம் பதிப்பகம், தஞ்சாவூர். · “தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத்திறன்” திறனாய்வு நூல் ஜூலை.2017 – நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை. · காடுறையும் பெருவளரி –கவிதைத் தொகுப்பு – டிசம்பர் – 2018 – முடிவிலி வெளியீடு, தஞ்சாவூர். · போன்சாய் குழந்தைகள் – கட்டுரைத் தொகுப்பு – 2019 – வெற்றிமொழி வெளியீடு · தூர் – சிறுகதைத் தொகுப்பு – ஜனவரி- 2020 – முடிவிலி வெளியீடு · வனதாரி கவிதைத் தொகுப்பு – 2021 – முடிவிலி வெளியீடு · தாமிராவின் சிறுகதைகள் – தொகுப்பாசிரியர் – மார்ச் – 2022 -முடிவிலி வெளியீடு “அன்னதான வரிசையில் செயற்கை நுண்ணறிவு” – குறுங்கவிதைத் தொகுப்பு .
2026 – அகணி – சிறுகதைத் தொகுப்பு (பதிப்பில்)ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்.
2023 -இல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் கலந்துகொண்டு ” கொரோனாவிற்குப்பின் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் மாற்றங்கள் ” எனும் தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார்.
2023 – பிப்ரவரி களரி இலக்கியக் களம், புதுச்சேரி திருக்குறள் உலக சாதனையாளர் அமைப்பு, யாழ் இலக்கிய முற்றம் நடத்திய போட்டியில் இவருடைய “வனதாரி” கவிதைத் தொகுப்பு முதலிடம் பெற்றிருக்கிறது.
மதுமிதாவின் காற்று வெளியிடை சேனல், அகில இந்திய வானொலி, இசைமுரசு வானொலி நிகழ்ச்சிகள், கலைஞன் பதிப்பகம் வழியாக இவரது நேர்காணல்கள், உரைகள் ஒளிபரப்பாகி உள்ளன.
இலக்கியம் தொடர்பான இவரது 100 கேள்விகள், பதில்கள் அடங்கிய தொகுப்பினை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தில் நடந்த இந்தோ மலேசியக் கருத்தரங்கில் பங்கேற்றவர். இவருடைய கவிதைகள், கட்டுரைகள் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில செயற்குழு உறுப்பினர், தஞ்சை மாநகரத் தலைவர்.
இலக்கியத் திறனாய்வாளர், தொகுப்பாசிரியர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்.
முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி
B. 112 , மெயின் ரோடு,
முனிகிபல் காலனி,
தஞ்சாவூர் 7
613007
73055 61618