| Profession | சமய அறிஞர் |
|---|
ஸ்ரீ அரவிந்தர், கல்கத்தாவில் டாக்டர் கிருஷ்ண தனுகோஷ் – ஸ்வர்ணலதா தேவி தம்பதி யருக்கு
15.8.1872 அன்று பிறந்தார். 1879-இல் குடும்பத் தினரால் இங்கிலாந்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டு, மான்செஸ்டரில் ட்ருயெட்ஸ் குடும்பத்தினருடன் தங்க வைக்கப்பட்டார்.
1983 வரை ட்ருயெட்ஸிடம் லத்தீன், பிரெஞ்சு மொழிகளைக் கற்று புலமை பெற்றார். ‘மகாஸின்’
என்னும் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.
1884 – 89இல் இலண்டனில் உள்ள செயின்ட் பால்ஸ் கல்லூரியில் படிக்கும்போது பல பரிசுகளைப்
பெற்றார். 1890-இல்ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றும், அதன் ஓர் அங்கமான குதிரைச்
சவாரித் தேர்விலிருந்து தன்னைத் தானே விலக்கிக் கொண்டார். இந்திய மஜ்ஜிலிஸ்ஸில்
காரியதரிசி ஆனார்.
1892-இல் இந்திய விடுதலைக்கென இலண்டனில் உருவாக்கப்பட்ட இரகசியச் சங்கத்தில்
உறுப்பினரானார். 1893இல் இந்தியா திரும்பினார். அப்பலோபந்தரில் காலடி வைத்தார்.
அப்பொழுது ஆன்மிக அனுபவம் பெற்றார். பின்னர், பம்பாயிலிருந்து வெளிவந்த ‘இந்து பிரகாஷ்’
இதழில் தீவிரவாதத் தேசியக் கட்டுரைத் தொடரை எழுதினார்.
1901-இல் கல்கத்தாவில், பூபாலசந்திரபோஸின் மகளான மிருணாளினியை மணந்தார்.
1902-இல் இரகசியச் சங்கத்தில் ஆர்வம் காட்டினார். 1905-இல் யோகம் புரியத் தொடங் கினார்.
1906-இல் விபின் சந்திரபாலரின் அழைப்பை ஏற்று ‘வந்தே மாதரம்’ இதழின் ஆசிரியர் ஆனார்.
பரோடாவில் ஆற்றிய பணியை விட்டுக் கல்கத்தாவில் தேசிய கலா சாலையின் தலைமை ஆசிரியராகப்
பணியாற்றினார். விடுதலை இயக்கத்துக்கான ஐந்து அம்சத் திட்டத்தை வெளியிட்டார்.
1907-இல் சூரத் காங்கிரசின் பிளவுக்குப் பின் மிதவாதிகளை ஆதரிக்காத தீவிரவாதிகள்
அரவிந் தரின் தலைமையில் தனியாக அவையைக் கூட்டினர்.
1908-இல் அலிப்பூர் அல்லது மாணிக்டோலா வழக்குத் தொடர்பாக சிறைலிடப்பட்டார். சிறையினுள்
ஆன்ம அனுபவம் பெற்றார். 1909இல் சிறையிலிருந்து விடுதலை அடைந்தார். ‘தருமா’,
‘கர்மயோகி’ ஆகிய இதழ்களின் ஆசிரியர் ஆனார்.
1910-இல் புதுவைக்கு வந்தார். ‘கர்மயோகி’யில் வெளிவந்த இவரது ஒரு கட்டுரைக்காக இவரைக்
கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அரவிந்தர் யோக சாதனையில் அமர்ந்தார். 1914-இல்
‘ஆரியா’ எனும் மாத இதழில் தொடர்ச்சி யாகக் கட்டுரைகளை எழுதினார். 1918-இல் மனைவி
மிருணாளினி கல்கத்தாவில் மரணம் அடைந்தார்.
1920-இல் ஆன்மிக உடனுழைப்பாளரான மிர்ரா என்ற ஸ்ரீ அன்னை புதுவையில் ஆசிர மத்தில்
சேர்ந்தார். 1926-இல் அதிமனம் என்னும் உயர்ந்த உணர்வு நிலையில் அரவிந்தர் சித்தி பெற்றார்.
5.12.1950-இல் ஸ்ரீ அரவிந்தர் உயிர் நீத்தார். ஐந்து நாட்கள் வரை சிதைவுறாதிருந்த அவரது
உடல், அதே மாதம் 9-ஆம் நாள் மகா சமாதி செய்யப்படடது.