| Profession | அறிஞர் |
|---|
திண்டுக்கல் நத்தம் இரா. செல்லையா – செ.சங்கரம்மாள் தம்பதியினருக்கு 15.7.1956 அன்று
பிறந்தார். நத்தம் (நகராட்சி) அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி.யில்
அப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று, மதிப்பெண் பலகையில் அவரது பெயர் இன்றளவும் இடம்
பெற்றிருக்கிறது.
மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ., பட்டங்களைப் பெற்றார். மதுரை
காமராசர் பல்கலைக் கழகத்தில் ‘வேட்டுவக் கவுண்டரின் குலச்சடங்குகள்’ என்ற தலைப்பில்
எம்.ஃபில் பட்டம் பெற்றார். ‘தமிழ்ச்செம்மல்’ தமிழண்ணல் வழிகாட்டுதலில், ‘சங்க இலக்கியத்தில்
செவ்வியல் பண்புகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தை அப்போதைய கவர்னர்
பி.சி.அலெக்சாண்டரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
1986-இல் நாமக்கல் இராமலிங்க பிள்ளை அரசு கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
1987-இல் மதுரை காமராசர் பல்கலைக் கழக தமிழியல் துறையின் ஒப்பிலக்கியத் துறை யில்
விரிவுரையாளராகச் சேர்ந்தார்.
கல்வியின் மீதுள்ள பற்றின் காரணமாக பேராசிரியர் பணியில் இருந்துகொண்டு எம்.ஏ.
(ஆங்கிலம்), எம்.எஸ்ஸி (உளவியல்) பட்டங்கள் பெற்றார். ‘பிராய்டியக் கனவுகளும் தமிழ்
இலக்கியக் கனவுகளும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து பி.லிட் பட்டம் பெறும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளார்.
இவர் பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தில் ‘உளவியல் சிந்தனை’ குறித்தும், மதுரை டோக்
பெருமாட்டி கல்லூரியில் ‘இலக்கியமும் உளப் பகுப்பாய்வும்’ என்ற தலைப்பிலும், நெல்லை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் ‘நோக்கு பின்நவீனத்தை வாசிப்பு’ என்ற
தலைப்பிலும் பேசியவை பெரும் பாராட்டுகளைப் பெற்றன. பல பல்கலைக்கழகங்களிலும்,
கல்லூரிகளிலும் இலக்கியம் தொடர்பான பல தலைப்புகளில் பேசி வருகிறார்.
இவரது இலக்கியப் படைப்புகளில் அதிக வர வேற்பைப் பெற்ற நூல் ‘செவ்வியல்’ ஆகும். இந்நூல்
மனித வாழ்வியலில் உகந்தக் கருத்து களைப் பொதுமை மனப்பான்மையுடன் ஒப்பிட்டுச் சொல்வதால்
வரவேற்கப்பட்டது. இந்நூலில் உள்ள இலக்கியச் சொல்லாடல்கள் அறிஞர் உலகில் வரவேற்கப்பட்டதும்,
பாராட்டப் பெற்றதுமாகும்.
புலத்துறைத் தலைவர், ஒப்பியல் துறைத் தலைவர், பெண்கள் கல்வி மையத்தின் துணை இயக்குநர்
(பொறுப்பு), ஆட்சிக்குழு உறுப்பினர், கூடுதல் தேர்வாணையாளர் (பொறுப்பு), பதிப்
பாசிரியர், ஆட்சிப் பேரவை உறுப்பினர், கல்விப் பேரவை உறுப்பினர், கல்லூரி ஆலோசனைக்
குழு தலைவர், பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுத் தலைவர்… இதுபோன்ற பல பொறுப்பு களை
ஏற்றுக்கொண்டு செயற்படுகிறார். இவரை ‘சங்கச் செல்வி’, ‘செவ்வியல் சாரதா’ என பாராட்டி
மகிழ்கின்றனர்.