| Profession | அறிஞர் |
|---|
திருத்தணிகை வங்கனூர் கிராமத்தில் நெசவாளர் குடும்பத்தில், செவ்வண்ண தேசப்பர் – வள்ளியம்மை
தம்பதியருக்கு 02.11.1933 அன்று பிறந்தார்.
1951-இல் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் படித்தார். முதலாமாண்டு விடுமுறையில்
உறவுப்பெண் வேலம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். அவர் இரண்டாவது மகப்பேறின்போது உயிர்
துறந்தார். பிறகு வேலம்மாளின் தங்கை ஈஸ்வரியைத் தன் ‘மகனுக்காக’ இரண்டாவது திருமணம்
செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ‘வரதராசன்’ என்றொரு மகன், இரண்டாவது மனைவிக்கு
‘செந்தாமரை’ என்றொரு மகள், ‘செழியன்’ என்றொரு மகன்.
கே.ஜி.கண்டிகையை ஒட்டிய செருக்கனூர் அக்கிரகாரம் சேரி ஓராசிரியர் பள்ளியில் ஆசிரியர்
பணியில் சேர்ந்தார்.
கலைஞரின் வசனத்தில் உருவான பராசக்தி சினிமா ஏற்படுத்திய பாதிப்பில் 1954-இல்
‘பணத்திமிர்’ என்றொரு நாடகத்தை எழுதி, அதில் கதாநாயகனாக சிவாஜிகணேசனைப் போல
நடித்தார். தணி கைக்கு அருகிலுள்ள சரஸ்வதி ஆலை ஊழியர்களுக்காக ‘யாருக்கு யார் சொந்தம்’
என்றொரு நாடகத்தை நடத்தினார். பின்னாளில் இந்நாடகம் குஜராத் மாநிலத்தில் வசிக்கும் ஓர்
உறவினரின் முயற்சியினால் அகமதாபாத் மாநகரில் அரங்கேறியது.
1957-இல் மாணவர் விடுதிக் கொண்டாட்ட தினத்தில் ‘சீதா கல்யாணம்’ எனும் நகைச்சுவை நாடகத்தை
எழுதி, அதில் அறுபது வயது வழக்கறிஞராக நடித்தார்.
சென்னை பாரி நிலையத்திற்காக ‘சுவாமி சங்கரதாசர்’ என்னும் வாழ்க்கை வரலாற்று நூலையும்,
‘முல்லை நிலைய’த்திற்காக ‘டாக்டர் ‘இராதாகிருஷ்ணன் வாழ்வும் தொண்டும்’, ‘மதுரை
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் தெளி வுரை’, ‘முத்தொள்ளாயிரம் தெளிவுரை’, புரட்சிக் கவி
தெளிவுரை’, ‘பாஞ்சாலி சபதம் தெளிவுரை’ ஆகியவற்றை எழுதியுள்ளார்.
இவரது சிறுகதைகள் ‘கண்ணீரும் கங்கை யாகலாம்’, ‘உலகத்தொண்டர்’ எனும் இரு தொகுப்புகளாக
வெளிவந்துள்ளன. ஐந்து புதினங்கள், ஒரு குறும்புதினம், ஒரு நாடகம், பதினோரு ஓரங்க
நாடகங்கள், மூன்று வாழ்க்கை வரலாற்று நூல்கள், பதினெட்டு ஆய்வு நூல்கள், ஒரு தன் வரலாற்று
ஆகியவற்றை இயற்றி வெளி யிட்டுள்ளார். பிறர் எழுதிய ஏழு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
திருமலை தேவஸ்தானத்தின் ரூ.2000 மானியத்துடன் ‘ஆன்மிக அலைகள்’ எனும் கட்டுரைத்
தொகுதியை வெளியிட்டார். ‘ஆன்மிக மலர்கள்’ எனும் கவிதை நூலையும் வெளியிட்டுள்ளார்.
திருவேங்கடவன் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை வாயிலாக ‘தவத்திரு சங்கரதாஸ் சுவாமி கள்
நாடகங்கள்’ எனம் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார். அந்த ஆய்வு ஏட்டை தமிழ் வளர்ச்சித்
துறையின் மானியமாக ரூ.8,000 பெற்று வெளியிட்டுள்ளார்.
‘தமிழ் இன்பம்’ எனும் தமிழ் இலக்கிய இதழை பேரா. பொன்.சௌரிராசனாரை முதன்மை
ஆசிரியராகவும், தான் ஆசிரியர் பொறுப்பேற்றும் நடத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ள உலகநாதர்,