| Profession | அறிஞர் |
|---|
மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணருக்குப் பிறகு, தமிழகத்தில் தலைசிறந்த முதன்மைமொழி
அறிஞராகத் திகழ்பவர் ப.அருளி. இவரின் முதல் நூல் ‘தகுதியே’ என்பதாகும்.
சென்னையில் உள்ள தமிழ், சமற்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளின் ஆராய்ச்சி நிறுவனத்தில்
பாவலரேறு பெருஞ் சித்தனார், பேரா. சுப்பு, பேரா. சி. பாலசுப்பிரமணியம், பேரா.
மெ.சுந்தரம், முனைவர் பொற் கோ, க.ப.அறவாணன், கா. அப்பாத்துரையார், முனைவர்
ஆறு.அழகப்பனார் போன்ற தமிழ் அறிஞர்கள் முன்னிலையில் இவர் ஆற்றிய மொழியியல் உரைகளைக்
கேட்டு அனைவரும் பாராட்டினர். அந்நிறுவனம் இவருக்குச் ‘சொல்லாய்வு அறிஞர்’ எனப் பட்டமும்
வழங்கி சிறப்பித்தது.
இவர் அறிவியல் முறைப்படி சொல்லாய்வு செய்வதை உணர்ந்த தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள்
துணை வேந்தர், முனைவர் வி.ஐ. சுப்பிரமணியம் அறிவியல் கலைச் சொல்லாக்க அகர முதலி
தொகுக்க வழிவகை செய்து தூயத் தமிழ் சொல்லாக்க அகர முதலிகள் துறைக்குத் துறைத்
தலைவராகப் பணியில் அமர்த்தினார்.
‘இவை தமிழல்ல’ (1923) எனும் நூலில் 120 பக்கங்களில் 2,060 அயல்மொழிச் சொற்களும்
அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் குறிப்பிட்டுள்ளார்.
அயற்சொல் அகராதி ‘இவை தமிழல்ல’ (1991) நூலில் 680 பக்கங்களில் 13,000 அயல்மொழிச்
சொற்களும், அதற்குரிய தமிழ்ச் சொற்களும் பதிவெய்தியுள்ளார்.
‘இவை தமிழல்ல’ என்னும் அயற்சொல் அகராதி முதல் தொகுதி 248 பக்கங்களும், இரண்டாம் தொகுதி
248 பக்கங்களும், மூன்றாம் தொகுதி 248 பக்கங்களும், நான்காம் தொகுதி 248 பக்கங்களும் ஆக,
மொத்தம் 992 பக்கங் களில் 20,000க்கும் «ற்பட்ட அயல்மொழிச் சொற் களும், அவற்றுக்கான தமிழ்ச்
சொற்களும் உள் அமையப் பெற்றுள்ளன. தொடக்க நிலையில் 1983, 1991-ஆம் ஆண்டுகளில் புறம்போந்த
இந்நூலின் சிறப்புகளையும், முறைமைகளையும் ‘தென்மொழி’ இதழ் வாயிலாக பெருஞ் சித்திரனார்
விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7அகராதி நூல்கள், 9வேரியல் ஆய்வு நூல்கள் ஆகியவை தமிழுலகிற்கு அருளியின்
பங்களிப்பாகும்.
1970-71-இல் பெருஞ்சித்திரனாரின் தொடர்பு அருளிக்குக் கிடைத்தது. 1972-இல் கடலூரில்
அன்றிருந்த தென்மொழி இல்லத்தில் பாவா ணரை முதன்முதலாகச் சந்தித்தார். 1973-இல் பாவாணர்,
பாவலரேறு ஆகியோருடன் திருவாரூருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்யும் வாய்ப்பு
வாய்த்தது. அப்போது பாவாணருடன் நெடுநேரம் அளவளாவுவதற் கான வாய்ப்பு கிடைத்தது.
1978-இல் அருளியின் ‘தகுதி’ எனும் கட்டுரைத் தொகுதி வெளியானது. அந்நூலின்
முன்னுரையில் இவர்தான் ‘தேவ நேயம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்தினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
இவர் பெருஞ்சித்திரனாரின் புதல்வி தேன் மொழியை மணந்தார். இவர்களுக்கு அறிவன், தெள்ளியன்
என இரு புதல்வர்கள்.