| Profession | அறிஞர் |
|---|
இராமநாதபுரம, இராஜ வீதியில் உள்ள கௌரிவிலாசம் அரண்மனையில் வள்ளல் பொன்னுச்சாமித் தேவர்
-முத்து வீராயி நாச்சியார் தம்பதியருக்கு 21.03.1867-இல் பிறந்தார். பெற்றோர் சூட்டிய
பெயர் உக்கிரபாண்டியன் பாண்டித்துரை. இவர்தம் மூன்றாம் வயதில் (1870இல்) தந்தையார்
காலமானார். இராமநாதபுரம் சேஷாத்திரி ஐயங்கார் வளர்த்தார்.
இராமநாதபுரம் அழகர் ராஜூ, சதாவதானம் முத்துசாமி ஐயங்கார் ஆகியோர் இவருக்குத் தமிழ்
கற்பித்தனர். இராமநாதபுரம் வக்கீல் வெங்கடேச சாஸ்திரி ஆங்கிலம் கற்பித்தார். இராமநாதபுரம்
சுவார்ட்சு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். ஜமீன் பொறுப்பை 1884-இல் ஏற்றார்.
நாகம்மை நாச்சியாரைத் திருமணம் செய்துகொண்டார்.
குழந்தை இல்லாததால் துரைக்கண்ணுவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கும்
குழந்தை இல்லை. சோமசுந்தர பாண்டியனை வளர்த்தார். அவர் இளமையிலேயே இறந்தார்.
மதுரையில் 1901- 21, 22, 23 ஆகிய தேதிகளில் கூடிய சென்னை அரசியல் மாநாட்டின்
வரவேற்புக்குழுத் தலைவராகப் பணியாற்றினார். 1905-இல் தூத்துக்குடியில் நிறுவப்பட்ட
சுதேசிக் கப்பல் நிறுவனத்தின் தலைவர் ஆனார்.
14.09.1901-இல் மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவி, அதன் தலைவராகப்
பொறுப்பேற்றார். அதேநாளில் சேதுபதி செந்தமிழ்க் கலா சாலையையும், பாண்டியன் நூல் நிலையத்
தையும், நான்காம் தமிழ்ச் சங்கத்தின் தமிழ் ஆய்வு மையத்தையும் தொடங்கினார். 1903-இல்
மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடான ‘செந்தமிழ்’ இலக்கிய இதழைத் தொடங்கினார்.
பாளையங்கோட்டை, தஞ்சை, திருவாரூர், சென்னை, சிதம்பரம் ஆகிய ஊர்களில் சைவ சித்தாந்த
மாநாடுகளில் சொற்பொழிவாற்றினார்.
இவர் இயற்றிய நூல்கள் ‘சிவஞானபுரம் முருகன் காவடிச் சிந்து’, சிவஞான சுவாமிகள்
பெயரில் இரட்டை மாலை, இராஜராஜேஸ்வரி பதிகம், தனிப்பாடல்கள் ஆகியனவாகும்.
உ.வே.சாமிநாத ஐயர், அரசஞ் சண்முகனார், செ.இராமசாமிப்பிள்ளை, சபாபதி நாவலர்,
ஆ.சிங்காரவேலு முதலியார், சுப்பிரமணிய கவி ராயர், திருநாராயண ஐயங்கார், சிவஞான
பிள்ளை, சிவகாமியாண்டார், சுந்தரேச ஐயர், சாமி ஐயங்கார், யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர்,
யாழ்ப்பாணம் சுன்னாகம் குமாரசாமி, நாவலர் குலாம் காதிர், அப்துல் காதிர் ராவுத்தர், பட்
டணம் சுப்பிரமணிய ஐயர், வையை மகா வைத் தியநாத ஐயர், தஞ்சை நாராயண சாமியப்பா, பெரிய
மகாதேவ ஐயர், சின்ன மகாதேவ ஐயர் போன்ற பலரையும் ஆதரித்தார்.
பன்னூல் திரட்டு, சைவ மஞ்சரி, நாற்கவிராச நம்பி அகப்பொருள் உரை, திருவாலவாய்த் திருப்
பணி மாலை, மதுரை தல வரலாறு, இலக்குமி தோத்திரம் ஆகியவற்றைத் தொகுத்து நூல்களாக
வெளியிட்டார்.
பொன்.பாண்டித்துரைச்சாமித் தேவர் 02.12.1911-இல் காலமானார்.