| Profession | அறிஞர் |
|---|
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகிலுள்ள மணிக் கட்டிப்பொட்டலில் 15.12.1940-இல்
பிறந்தார். அப்பா: சிவபொன்னீல வடிவு. அம்மா: அ.அழகியநாயகி அம்மாள். பின்னாளில் ‘கவலை’
நாவலை எழுதியவர்.
1960-இ¢ ல் ஸ்டாக் கிறித்தவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மதுரை
தியாகராசர் கல்லூரி யில் இளங்கலை ஆசிரியப் பயிற்சிக் கல்வியையும், 1976இல் தூய
சவேரியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் முதுகலை ஆசிரியர் பயிற்சி கல்வியையும்
முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
பெற்றார்.
1967-இல்திருமணம். மனைவி கனியம்மாள்.அழகுநிலா, அனிதா என இரு மகள்கள்.
1960-இல் வருவாய்த் துறையில் எழுத்தராக அரசுப் பணியைத் தொடங்கியவர், 1979 முதல்
பல்வேறு ஊர்களி லுள்ள பள்ளிகளில் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும்,
ஆய்வாளராகவும், மாவட்ட கல்வி அலுவலராகவும் பணியாற்றி, 1998-இல் கோவை மாவட்ட முதன்மை
கல்வி அலுவலராகப் பொறுப்பேற்று 1998-இல் பணி நிறைவு பெற்றார்.
1960-களில்தமிழ் எழுத்துலகுக்கு அறிமுகமான பொன்னீலன், மார்க்சிய அழகியலைத் தனது
படைப்பில் புகுத்தி அழகுபடுத்தினார். தம் அரசுப் பணி நிமித்தமாகவும், ‘தமிழ்நாடு கலை
இலக்கியப் பெருமன்றம்’ அமைப்பு நிமித்த மாகவும் தமிழ்நாடு முழுவதும் சுற்றியவர்.
இவரது ‘கரிசல்’ (1982), ‘ஜீவா என்றொரு மானுடன்’ (1983) ஆகியஇரு நூல்களும் தமிழ்
நாடு அரசின் முதல் பரிசைப் பெற்றன. ‘மார்க்சிய அழகியலின் அடிப்படைகள்’ எனும் மொழி
பெயர்ப்பு நூலுக்கு 1994-இல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக விருதும், அதே ஆண்டு ‘புதிய
தரிசனங்கள்’ நூலுக்காக ‘சாகித்ய அகாதமி’ விருதும் பெற்றார். 1997-இல் ‘காமம்
செப்பாது’ நூலுக்கு லில்லி தேவசிகாமணி விருதும், திருப்பூர் தமிழ்ச் சங்க விருதும்,
2011-இல் ‘மறுபக்கம்’ புதினத்திற்காக ‘கு.சின்னப்ப பாரதி விருது’, திருப்பூர் தமிழ்ச்
சங்க விருது’, ‘இலக்கியச் சிந்தனை பரிசு’, ‘பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக விருது
ஆகியவையும், இதே நூலுக்காக 2012-இல் தினத்தந்தி ‘சி.பா. ஆதித்தனார் இலக்கியப்
பரிசை’யும், 2013-இல் ‘குமரி ரத்னா’ விருதையும் பெற்றுள்ளார்.
இவரது ‘உறவுகள்’ குறுநாவல் இயக்குநர் மகேந்திரனால் ‘பூட்டாத பூட்டுகள்’ எனும்
திரைப்படமானது. ‘கரிசல்’ புதினம் பஞ்சாப் மொழியில் வெளிவந்துள்ளது. இப்புதினத்தை
தேசிய புத்தக நிறுவனம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட தேர்ந்தெடுத்துள்ளது.
‘ஜீவா என்றொரு மானுடன்’ நூலில் இடம் பெற் றுள்ள ‘ஜீவாவும் இலக்கியமும்’ என்ற பகுதி ரஷ்ய
மொழியில் ‘சோஷலிச எதார்த்தவாதம்’ எனும் நூலில் இடம்பெற்றுள்ளது. கரிசல், கொள்
ளைக்காரர்கள், தேடல், புதிய மொட்டுகள், குன்றக்குடி அடிகளார்: தமிழகத்தின் ஆன்மிக
வழிகாட்டி, மறுபக்கம் ஆகிய நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் பாடநூல்களாக இடம்
பெற்றுள்ளன.