பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்

பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்

Profession அறிஞர்

Biography

குமரி முகிலன் குடியிருப்பில் சு.இரெத்தின சாமி-இரெ.பத்மாவதி தம்பதியருக்கு
09.10.1960 இல் பிறந்தார்.

தமது ஊரிலுள்ள பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த இவர், அகத்தீசுவரம் விவேகானந்தர்
கல்லூரியில் பி.யூ.சி., பி.ஏ. (பொருளாதாரம்) பட்டம் பெற்று, மதுரை காமராசர் பல்கலைக்
கழகத்தில் எம்.ஏ. (தமிழ்), அண்ணாமலைப் பல்கலைக்கழக அஞ்சல் வழியில் பி.எட்., மதுரை
காமராசர் பல்கலைக் கழக அஞ்சல் வழியில் எம்.ஏ. (மொழியியல்), சேலம் பெரியார் பல்கலைக்
கழகத்தில் எம்.ஏ. (கல்வியியல்) , வலம்புரி ஜான் உரைநடையை ஆய்வு செய்து எம்.ஃபில்,
சென்னை மாநிலக் கல்லூரியில் ‘சி.பா. ஆதித்தனாரின் தமிழ்ப்பணியும் இதழ்ப் பணியும்’ என்ற
தலைப் பில் ஆய்வு செய்து முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரம் மூலமாக இராஜபாளையத்தில் சமூக சேவக ராகவும்,
கல்பாக்கம் அணுவாற்றல் மத்திய மேல் நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் கொஞ்ச காலம்
பணிபுரிந்த பின், 1997 முதல் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளராக
வும், விருத்தாசலத்திலுள்ள கொளஞ்சியார் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாள
ராகவும், பின்னர் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியிலும் பணியாற்றினார்.

தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் உதவி இயக்குநராகி, பின்னர் மாநிலக் கல்லூரியில்
பணியாற்றினார்.

31-ஆம் வயதில் திருமணம். துணைவி: எஸ்.சி.செல்வதங்கம். இவர் எம்.எஸ்சி., எம்.எட் படித்த
அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியர். இவர்களுக்கு இரா.பாவை என்றொரு மகள்,
இரா.கோவன் என்று ஒரு மகன்.

பள்ளிப் பருவத்திலேயே தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ இதழ் மூலமாக அவரது துப்பறியும்
நாவல்களின் தீவிர வாசகரான இவர், பின்னர் அகிலன், தி.ஜா, நா.பா., ஜெயகாந்தன்,
கு.அழகிரிசாமி என தனது வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்திக்கொண்டு, எழுதவும் தொடங்
கினார்.

இதுவரை 2 கவிதைத் தொகுதிகள், 4 சிறுகதைத் தொகுதிகள், 5 புதினங்கள், 4 நாட கங்கள், 3
வாழ்க்கை வரலாறுகள், 3 திற னாய்வுகள், 2 இதழியல், 2 வரலாறு, 2 மொழி யியல், 8
சிறுவருக்கானவை, 3 இலக்கணம் என 48 நூற்களை எழுதியுள்ளார்.

100-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு கருத்தரங்குகளில் வழங்கியுள்ளார். பல்வேறு
பல்கலைக் கழகங்களுக்கு பாடநூல் களை எழுதித் தந்துள்ளார். தலைநகர் தமிழ்ச் சங்கம், குமரி
தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் தலை வராகச் செயற்படுகிறார்.

‘கதைச் செம்மணி’ போன்ற பட்டங்களைப் பெற்றுள்ள இவருக்கு மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்
கழகம், இந்தியப் பல்கலைக் கழகம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், இலக்கிய பீடம், இராஜபாளையம்
திருவள்ளுர் மன்றம், தாரா பாரதி அறக்கட்டளை, பாரத ஸ்டேட் வங்கி, புதுகைத் தென்றல் போன்ற
பல அமைப்புகள் பரிசுகளும் விருதுகளும் வழங்கிச் சிறப்பித்துள்ளன.