பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன்

Profession அறிஞர்

Biography

மேலைச்சிவபுரியில் புலவர் நா.மு.மாணிக்கம் – அலர்மேலு இணையருக்கு 02.01.1953இல்
பிறந்தார். இயற்பெயர் தமிழரசன். ஈரோட்டில் தொடக்கக் கல்வி யையும், நெய்வேலி, சிதம்பரத்
தில் உயர்நிலைக் கல்வியையும் பயின்றார். கல்லூரி மாணவ ராக இருந்தபோது காரைக்குடி
அ.வீர.மு.வீர.பழனியப்பன் செட்டியார் – மீனாட்சி ஆச்சி இணையரின் வளர்ப்பு மகன் ஆனார்.
இதனால் பழ.முத்து வீரப்பன் எனப் பெயர் சூட்டப் பெற்றார்.

கொத்தமங்கலம் சி.அண்ணா மலைச் செட்டியார்- அண. திலகவதி இணையரின் மகள் உமையாள் இவரது
வாழ்க்கைத் துணையானார். இவர்களுக்கு நன்முல்லை என்றொரு மகள்.

இளங்கலை, 1974-76இல் முதுகலை பயின்று பட்டங்களைப் பெற்றார். அதே பல்கலைக் கழகத்தில்
1976-இல் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1983-இல் சமஸ்கிருதத்தில் பட்டயம் பெற்ற
இவர், ‘தி.ஜானகிராமன் சிறு கதைகள்: ஒரு திறனாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
முனைவர் பட்டத்தினை சிறப்பு நிலையாகப் பெற்றார்.

1987-இல் இணைப் பேராசிரியர், 1994-இல் பேராசிரியர் என பதவி உயர்வு பெற்றார்.
2005-2008-இல் தொலைதூரக் கல்வி இயக்கத் தலை வரானார். 2008 முதல் தமிழியல் துறைத்
தலைவராகவும், இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றி,
2013 சனவரியில் பணிநிறைவு பெற்றார்.

‘பொன்னரசி’ என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். இளந்தமிழன், முல்லைச்சரம், கவிதா
மண்டலம், வானம்பாடி ஆகிய இலக்கியச் சிற்றிதழ்களிலும், ஆனந்த விகடன், தினமணி ஆகிய
பிரபல இதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

இரண்டு கவிதைத் தொகுப்புகள், ஆறு ஆய்வு நூல்கள், மூன்று கட்டுரைத் தொகுதிகள், ஒரு
பொழிவுநூல் ஆகியவற்றைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளார். மணிவிழாச் சிறப்பு மலர்,
திருக்குறள் சொற்பொருள் அகராதி ஆகியனவும் இவரது பங்களிப்புகள் ஆகும்.

தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் நடத்தப்பெற்ற பயிலரங்குகள்,
கருத்தரங்குகள்ஆகியவற்றில் ஆய்வுரைகளும், கருத்தரங்கத் தலைமை மற்றும் அமர்வுப் பொழிவுகள்
நல்கியுமுள்ளார். வானொலியில் 50க்கும் மேற்பட்ட பொழிவுகள் அளித்துள்ளார்.

பதின்மூன்று முனைவர் பட்ட மாணாக்கர் களையும், முப்பத்தேழு இளமுனைவர் பட்ட ஆய்வாளர்களையும்
நெறிப்படுத்தியுள்ளார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கல்விக்குழு உறுப்பினர்
உட்பட பல்வேறு பல் கலைக் கழகங்களில் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுச் சிறப்பாகச்
செயலாற்றியுள்ளார்.

சுகிசிவம் எழுத்தாளர்

1953-இல் திருச்சியில் பிறந்தார். அப்பா கலைமாமணி டி.என்.சுகி.சுப்பிரமணியன். சென்னை
வானொலியில் நாடகத் தயாரிப்பாளராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய எழுத்தாளர். அம்மா கோமதி
சுப்பிரமணியம் எழுத்தாளர். இவர்களது ஆறாவது கடைசிக் குழந்தை சுகி.சிவம். குடும்பத்தில்
எல்லோரும் கவிதை, எழுத்து, நடிப்பு என பல்வேறு கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு புகழ்
பெற்றவர்கள்.

சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை விவேகானந்தர் கல்லூரியில்
பி.ஏ. பொருளியல் பட்டம் பெற்றார்.

6.5.1981- இல் திருமணம். மனைவி ராஜேஸ்வரி. மாமனார் மாஜிஸ்டிரேட் ராஜகோபால். ஒரு
மகன், ஒரு மகள்.

பள்ளியில் படிக்கும்போது குண்டாக இருந்த இவரை கேலி செய்தனர். தாழ்வு மனப்பான்மையை
நீக்கி, தன்னம்பிக்கை வளர்க்க மேடையில் பேசத் தொடங்கினார்.

கிருபானந்த வாரியார் சொற்பொழிவினால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னர் ஓஷோவின் எழுத்து களாலும்
ஈர்க்கப்பட்டார்.

தன் தாத்தாவின் விருப்பத்துக்காக சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல்., பட்டம் பெற்ற இவர்,
வழக்கறிஞர் ஆகாமல், சமயச் சொற் பொழிவையே முழுநேரப் பணியாக ஏற்றார். பின்னர்,
தன்னம்பிக்கைச் சொற்பொழிவிலும் சாதனை படைத்தார்.

35 ஆண்டுகளுக்கு முன் தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு
கவிதை பாடவேண்டிய அறிஞர் ஒருவர் வர இயலாததால் தனக்குப் பதிலாக கல்லூரியில் படித்துக்
கொண்டிருந்த இவரை அவர் அனுப்பி இருந்தார். கலைஞர் அரை மனதுடன் அனுமதித்தார். இவர்
கவிதை பாடப்பாட, கரவொலிகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. “சிறுவனென்று ஏமாந்தேன். சிறுவன்
அல்ல நீ சிறுத்தைக் குட்டி” என்று பாராட்டினார் கலைஞர்.

அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகள் என்று பெரும்பாலான உலக நாடுகளில் பயணம் செய்து
சொற்பொழிவாற்றியுள்ளார்.

ஆன்மிகம், சுயமுன்னேற்றம், கல்வி, உடல் நலம், குடும்பம், சமூகம் சார்ந்த 40 நூல்களை
எழுதியுள்ளார். இவரது படைப்புகளை எம்.பில். மாணவர்கள் பலர் ஆய்வுக்குப் பயன்படுத்தி
யுள்ளனர்.

சுகி.சிவம் தமது பேச்சிலும் எழுத்திலும் தொடாத துறைகளே இல்லை எனலாம். ஆதி சங்கரர்
முதல் அருணகிரியார் வரை எழுது கிறார். கல்வி முதல் கலவி வரை சிந்திக்கிறார். சமயம்
முதல் சரித்திரம் வரை பேசுகிறார். இலக்கியம் முதல் இனக்கவர்ச்சி வரை எடுத்துக்
காட்டுகிறார். சோதிடம் முதல் சொப்பனம் வரை கூறுகிறார். ஆசிரியர் முதல் அரசியல் வரை
அலசுகிறார். நல்லாசிரியர் இலக்கணத்தை நன்னூல் பவணந்தி போல் காலத்துக்கேற்ற வகையில் காட்டி
விளக்குகிறார்.