| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் தொப்பதாஸ் – லட்சுமி தம்பதியருக்கு 04.03.1950 அன்று
பிறந்தார்.
1971-இல்காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.ஏ. (தமிழ்) பயின்றார். 1976-இல் மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறவியல், சமஸ்கிருதம் இரண்டிலும் சான்றிதழ் பெற்றார்.
‘அழகர் கோயில்’ பற்றி களஆய்வு செய்து 1981-இல் முனைவர் பட்டம் பெற்றார்.
1971-இல் இளையான்குடி கல்லூரியில் தமது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். மதுரை
தியாகராசர் கல்லூரி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் என 36 ஆண்டுகள் கல்விப்
பணியாற்றி 2007-இல் விருப்ப ஓய்வு பெற்றார். இவரது நெறியாள்கையில் 35 இளநிலை
ஆய்வாளர்களும், 8 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாட்டுச் சமூகத் தொல்பொருள் ஆராய்ச்சி தஞ்சாவூர் மற்றும் மதுரை வட்டார ஆராய்ச்சிப்
பிரிவுகளில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். பயிற்சிப் பட்டறைகளிலும்
கருத்தரங்குகளிலும் அமர்வுத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
தமிழ், தமிழினம், தமிழகம், சாதிகள், சமயங்கள், சிறுதெய்வங்கள், கோயில்கள், வழிபாடுகள்,
விழாக்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டு மரபுகள், வாழ்வியல் முறைகள் ஆகியவற்றை
தனது கள ஆய்வுகளின் வழியே நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.
‘கலையும் கருத்தியலும்’ (1992), ‘பூனா ஒப்பந்தம்: பின்னணியும் விளைவுகளும்’ (1994),
‘முருக வழிபாடு’ (1994), ‘தெய்வங்களும் நெறி களும்’ (1995), ‘தமிழியல் புத்தக
விமர்சனம்'(1995), அரிசன ஆயலப் பிரவேசம் (1996) ஆகிய தலைப் புகளில் கல்லூரிகளிலும்
வானொலியிலும் உரையாற்றியுள்ளார்.
இவர் ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’, ‘அழகர்கோயில்’, ‘அறியப்படாத தமிழகம்’,
‘சமயங்களின் அரசியல்’, ‘நாள்மலர்’, ‘பண்பாட்டு அசைவுகள்’, ‘நான் இந்துவல்ல நீங்கள்’,
‘தெய்வம் என்பதோர்’, ‘வழித்தடங்கள்’, ‘விடுப்பூக்கள்’, ‘இது தான் பார்ப்பனியம்’, ‘இந்து
தேசியம்’, ‘பண்பாட் டின் வாழ்வியல் செவ்வி’, உரைகல் உட்பட 18 நூல்களை எழுதியுள்ளார்.
நாட்டார் வழக்காற்றி யல், நாட்டுப்புறவியல், பன்னாட்டுத் தமிழ்ப் பனுவல் போன்ற இதழ்களில்
பணியாற்றியுள்ளார்.
‘இளைய தலைமுறை’யின் இலக்கிய விருது, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் தின்
‘பெரியார் விருது’, மதுரை ‘கார்மேக னார் விருது’, பாளையங்கோட்டை ‘மக்கள் விருது’
போன்றவற்றைப் பெற்றுள்ளார்.
2004-இல் தமிழாசிரியர் பணிக்காக கனடா பல்கலைக் கழகத்திற்குச் சென்று வந்துள்ளார்.
தொ.பரமசிவம் தனது 70-ஆவது வயதில் 24.12.2020 அன்று பாளையங்கோட்டையில் காலமானார்.