| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி நாங்குனேரியில் சேஷன் – ரங்கநாயகி தம்பதியருக்கு 1935-இல் பிறந்தார்.
தந்தையார் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பணியாற்றியதினால் பள்ளிக் கல்வியை திரு
விதாங்கூரிலும் மதுரையிலும் பயின்றார்.
ஐந்தாம் வகுப்பு வரை மலையாளத்தில் கட்டயாயமாகப் படிக்க வேண்டிய சூழல். அந்தச் சூழலே
மலையாள அறிவிற்கு வித்திட்டதுடன், மனதில் புரட்சிகர கருத்துகள் தோன்றவும் காரணமாக
அமைந்தது.
காந்தி கிராமத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து பயின்றார். தேர்வு முடிவு
வருமுன்பே மு.அருணாசல முதலியார் கேரளத்தில் இவருக்கு பணி வாய்ப்பை வழங்கினார்.
பின்பு, தேசிய நாடகப் பள்ளியில் நாடகப் படிப்பை முடித்தவுடன் காந்தி கிராம கிராமியப்
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
1956-1964 இல் காந்தி கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும், 1987- 1977 இல் ஃபைன் ஆர்ட்ஸ்
பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகவும், 1978-1984 இல் கல்கத்தா பல்கலைக் கழக நாடகத்
துறையில் உதவி இயக்குநராகவும், 1985-1995 இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துறைத்
தலைவர் மற்றும் பேராசிரியராகவும் பணியாற் றினார்.
11 நாடகங்களை இயற்றியுள்ள இவர், 8 நாடக ஆய்வு நூல்களை எழுதினார்.
மத்திய சங்கீத நாடக நிறுவனத்தில் நிறுவனத் தலைவராகவும், தேசிய நாடகப் பள்ளியில் சமூகம்
மற்றும் நிதிக்குழு உறுப்பினராகவும், இந்தியாவில் நடைபெற்ற நாடக ஆய்வுத் திட்டத் தின்
கடவுத்துறை ஆலோசகராகவும், உலக கலைக்களஞ்சியத்தில் புனைவு மற்றும் கற்பனை வள
இயக்குநராக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு துறைகளிலும் பணியாற்றினார்.
தமிழக அரசின் ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் கலை மற்றும் பண்பாட்டு உறுப்பினராகவும்,
தஞ்சை, தென்னகப் பண்பாட்டு மையத்தின் திட்டக்குழு உறுப்பினராகவும், நாடகத் திட்டத்தின்
ஆலோசனைக் குழு உறுப்பினராக மட்டுமல்லாமல் தமிழகம், கேரளா மற்றும் இந்திய அளவில்
ஏராளமான பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றினார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் ‘இலக்கிய விருது’, ஜி.சங்கரம்பிள்ளையின் ‘தேசிய விருது’,
பாண்டிச்சேரி ‘தலைக்கோல் விருது’, கேரள சங்கீத நாடக அகாதெமியின் ‘பெலோஷிப்’,
அமெரிக்கா வழங் கிய ‘விளக்கு விருது’, கேரளா சேமன்சேரி கலால யத்தின் ‘மலபார்
சுகுமாரன் பாகவதர் நினைவு விருது’, பாண்டிச்சேரி சிறிய அரங்கக் கலை இயக்கத்தின்
மூலமாக கலாம் வழங்கிய ‘நாடகத் தந்தை விருது’, ‘காவ்யா பதிப்பக விருது’ ஆகிய வற்றை
வழங்கப் பெற்றார்.
சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆகிய நாடு களுக்குச் சென்று கருத்தரங்குகளில் பங்கேற்ற
துடன், நாடகங்களையும் நிகழ்த்தினார்.
இவர் தனது 87-ஆவது வயதில் 13.12.2015 அன்று காலமானார்.