| Profession | அறிஞர் |
|---|
கன்னியாகுமரி கோட்டாறில் வணிகக் குடும்பத்தில் சுப்பையா – செண்பகம் தம்பதியருக்கு
11.02.1942-இல் பிறந்தார்.
1959-இல் தேசிக விநாயகம் தேவஸ்தானம் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்
கொண்டிருந்தபோது, இவர் எழுதிய ‘எனது வாழ்க்கைப் பயணம்’ என்ற சிறுகதை பள்ளி ஆண்டு
மலரில் வெளி யாகி, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
இந்துக் கல்லூரியில் தமிழ் இலக்கியமும் இலக்கணமும் கற்ற காலத்தில் இவருக்கு சிறுகதைகள்
எழுதுவதில் அதிக நாட்டம் ஏற்பட்டது. இவரது ‘கடன் பட்ட நெஞ்சம்’ என்ற சிறுகதை கல்லூரி
மலரில் வெளிவந்தது. தொடர்ந்து எழுதிய ‘நிலமகள்’, ‘பூக்காரி’ எனும் இரு சிறுகதைகளும்
சென்னையிலிருந்து வெளிவந்த ‘கலையமுது’ இதழில் வெளிவந்தன. இதுவரை 2 இலக்கண நூல்கள்,
5 மொழியியல் நூல்கள், 4 கல்வித்துறை சார்ந்த நூல்கள், 1 கணினி நூல், 2 அகராதிகள்
ஆகியவற்றை எழுதியுள்ளார். 11 நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
1964-இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் மாணவராகச் சேர்ந்தார். 1996-இல்
பல்கலைக் கழக மானியக் குழுவின் உதவித் தொகையைப் பெற்று முனைவர் பட்ட ஆய்வு மாணவராகச்
சேர்ந்தார். 1970-இல் இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தில் சேர்ந்தார். 1976-இல் டாக்டர்
பட்டம் பெற்றார். 1982-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் அயல் நாட்டுத் தமிழ்க் கல்வித்
துறையின் இணைப் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங் கினார்.
1986-இல் களஆய்வுக்காக மொரீசியஸ் சென்றார். 1988-இல் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இந்திய
மொழிகள் பள்ளியில் பேராசிரியராக இணைந்து 2002 வரை ஏறத்தாழ 15 ஆண்டுகள்
இத்துறையிலேயே பணியாற்றினார். 1989-இல் பல்கலைக் கழக வயது வந்தோர் கல்வித் துறையின்
மதிப்புறு இயக்குநர் ஆனார். அதே ஆண்டில் மொரிசீயஸில் நடைபெற்ற 7-வது உலகத் தமிழ்
மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டு உரைகளை இரண்டு பாகங்களாகத் தொகுத்து, மொரீசியல் உலகத்
தமிழாராய்ச்சி மன்றத்தின் வெளியீடாக 1995-இல் வெளியிட்டார்.
1993-இல் மொழிப்புலத் தலைவராகவும், தமிழ்ப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு உறுப்பினராகவும்,
நிதிக்குழு உறுப்பினராகவும் செயலாற்றினார். 1995-இல் தஞ்சையில் நடைபெற்ற 8-ஆவது உலகத்
தமிழ் மாநாட்டின் ஆய்வரங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இம்மாநாட்டில் வாசிக்கப்பட்ட 500
கட்டுரைகளையும் ஐந்து தொகுதிகளாகத் தொகுத்தார். 2001-இல் சிங்கப்பூரில் நடைபெற்ற 5-வது
உலகத் தமிழாசிரியர் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை வாசித்தார். 2002-இல் தமிழ்ப் பல்கலைக்
கழகப் பேராசிரியர் பதவியிலிருந்து பணி நிறைவு பெற்றார். மொரீசியஸ், மலேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று பணியாற்றி யுள்ளார். ஆய்வுப் பணியைத் தொடர்கிறார்.