பேராசிரியர். சாமிமுத்து

பேராசிரியர். சாமிமுத்து

Profession அறிஞர்

Biography

01.11.1931-இல் திண்டுக்கல் அ. வெள்ளோடு கிராமத்தில் பிறந்தார்.

திருச்சி அர்ச் சூசையப்பர் கல்லூரி (தற்போதைய தூய வளனார் கல்லூரி)யில் மத்திய அரசின்
சிறப்பு உதவித்தொகையுடன் இன்டர்மீடியட், பி.ஏ. பயின்றார். நாகர்கோயில், தென் திருவாங்கூர்
இந்துக் கல்லுரியில் தமிழில் முதுகலைப் பயின்றார். நாகர்கோயிலிருந்து வெளிவந்த
‘தியாகநாடு’ வார இதழில் ‘முத்தரசு’ எனும் புனை பெயரில் கவிதை, கட்டுரைகள்
எழுதினார்.

1957-இல், கன்னியாகுமரி மாவட்ட மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார்.
1958-இல் ‘இந்திய தத்துவம்’ பற்றிய ஆங் கிலக் கட்டுரைப் போட்டியில் திருவாங்கூர் மாமன்னர்
சித்திரைத் திருநாளின் முதல் பரிசான தங்கப் பதக்கத்தை வென்றார்.

03.05.1959-இல் பெ. கிளாரா மேரி என்பவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றார். இவர்களுக்கு
பாப்புபெஞ்சமின் இளங்கோ, அந்தோணி அன்பரசு, சகாயம் பால்பாண்டியன், ஆரோக்கியம் பெஸ்கி
நேரு, தாமஸ் முத்துநிலவன், சில்வியா சவுரிமுத்து ஆகிய ஆறு குழந்தைகள்.

1958-இல் தூய வளனார் கல்லூரி தமிழ்த் துறையில் தமிழ் விரிவுரையாளராகப் பணியில்
சேர்ந்து, தமக்குப் பாடம் கற்பித்த பேராசிரியர் களோடு சேர்ந்து பணியாற்றும் அரிய வாய்ப்
பினைப் பெற்றார். துணைப் பேராசிரியர், பேரா சிரியர், தமிழாய்வுத்துறைத் தலைவர், துணை
முதல்வர் என பல்வேறு பணி உயர்வுகளைப் பெற்று 32 ஆண்டுகள் பணியாற்றி 1990-இல்
பணிநிறைவு பெற்றார். அதன் முன்பு குடியரசுத் தலைவரிடம் பரிசும், பாராட்டும் பெற்றார்.

தேசிய மாணவர் படை, என்.சி.சி. அதிகாரி யாகப் பணியாற்றியுள்ளார். திருச்சி மறை
மாவட்டக் கத்தோலிக்க இளைஞர் மன்றத் தலை வராகவும், மன்றமுரசு மற்றும் பிரான்சிஸ் கன்ஒலி
இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

மாணவப் பருவத்திலிருந்தே (1954 முதல்) கத்தோலிக்க சேவை, தியாக பூமி, மாலைமுரசு,
தினத்தந்தி, நம்வாழ்வு போன்றஇதழ்களிலும், பத்திரிகைகளிலும் கவிதை, கதை, கட்டுரை எழுதி
சிறந்த எழுத்தாளராகத் திகழ்ந்துள்ளார். இதுவரை 18 நூல்களை எழுதியுள்ளார்.

இவரது நெறியாள்கையில் மூவர் முனைவர் பட்டமும், இருவர் ஆய்வியல் நிறைஞர் பட்ட மும்
பெற்றுள்ளனர்.

ஜோர்டான், இஸ்ரேல், எகிப்து, பாலஸ்தீனம் ஆகிய அயல்நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.

முத்தமிழ் மாமணி, குறள் பொழிவுச் செம்மல், குறள் ஞாயிறு, வேதாமகச் செம்மல், கலைக்
காவிரி, தமிழ் மாமணி, சிந்தனைப் பேரொளி, கிறித்துவ இலக்கியச் செம்மல், சமய நல்லிணக்கச்
செம்மல், தமிழ்ச் செம்மல் ஆகிய விருதுகளை யும், திருக்குறள் விருது, டாக்டர்
இராதாகிருஷ் ணன் விருது, ஞானராஜா மகிமைச் செல்வி இலக்கிய விருது, மேன் ஆஃப் தி இயர்
2011 விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.