பேராசிரியர் சரளா ராஜகோபாலன்

பேராசிரியர் சரளா ராஜகோபாலன்

Profession அறிஞர்

Biography

பூவிருந்தவல்லி இராசவடிவேலு- உமையபாரதி தம்பதியருக்கு 23.01.1942 அன்று பிறந்தார்.

பள்ளிப் படிப்பைச் சென்னை சேத்துப்பட்டு சேவாசதனம் பள்ளியிலும், புகுமுக வகுப்பு முதல்
முதுகலைப் பட்டம் வரை சென்னை இராணி மேரி கல்லூரியிலும் பயின்றார். ‘சங்க இலக்கியத்தில்
தோழி’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1980-இல் முனைவர் பட்டம் பெற்றார்.

அடுத்த ஆண்டே சென்னை இராணி மேரி கல்லூரியில் தனது திருத்தர் (டியூட்டர்) பணியைத்
தொடங்கிய இவர், பின்னர் துணைப் பேராசிரியர், பேராசிரியர் எனப் பதவி உயர்வு பெற்று
மதுரையிலுள்ள மீனாட்சி அரசுக் கல்லூரி, சென்னை நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி,
வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா மகளிர் கல்லூரி என பணியாற்றி இறுதியாக சென்னை இராணி
மேரி கல்லூரியில் பணி நிறைவு பெற்றார்.

மலையமான் (என்கிற) முனைவர் ராஜகோபாலனைத் திருமணம் செய்து கொண்டார். சிறுவை
மோகனசுந்தரனாரின் (நச்சினார்க் கினியர்) வழிகாட்டுதலில் தமிழர் திருமணமாக நடந்தது.
ந.சஞ்சீவி, மயிலை சீனி. வேங்கடசாமி முதலான வருகை தந்து வாழ்த் தினர்.
இவ்விணையருக்கு’தமிழொளி’ என்றொரு மகள்; அன்பொளி என்றொரு மகன்.

இவர் கவிதைத் தொகுதி- 2, சிறுகதைத் தொகுதி- 1, நாடகம்- 1, ஆய்வு- 45, வாழ்க்கை
வரலாறு- 5, தொகுப்பு- 10, குழந்தைகளுக்கா னவை- 15 ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
‘தமிழ்த் தென்றலும் பெண்மையும்’, பழமொழி களில் பெண்மை’ இரண்டும் தமிழக அரசின்
பரிசுகளையும், ‘குடும்ப விளக்கு: ஓர் ஆய்வு’ கே.ஆர். சி.அறக்கட்டளை இலக்கியப் பரிசி
னையும், ‘பாரதியின் பாஞ்சாலி சபதம்’ உரத்த சிந்தனை பரிசையும், ‘பாரி மகளிர்’ பாரத
மாநில வங்கிப் பரிசையும், ‘சின்னச் சின்னக் கதைகள்’ திருப்பூர் தமிழ்ச் சங்க விருதையும்
பெற்றுள்ளன.

1981-இல் தமிழக அரசு நடத்திய ‘பாவேந்தர் பாரதிதாசன் விழா’, மகளிர் கவியரங்கம் உள்
ளிட்ட பல கவியரங்கங்களில் தலைமை தாங்கி யுள்ளார். பல்வேறு அமைப்புகளில் சொற்பொழி
வாற்றினாலும், அதற்காக இதுவரை ஊதியம் எதுவும் வாங்கியதில்லை.

தமிழக அரசின் தமிழ்ப் பல்கலைக்கழக இராசராசன் விருதுக்குழு, தமிழக அரசின் மருத்துவத்
தேர்வுக் குழு, நூலகத் தேர்வுக் குழு, சி.எல்.எஸ். நிதி நல்கைக் குழு, ஞானபீடப் பரிசு
பரிந்துரைக் குழு, பொதிகைத் தொலைக்காட்சி வல்லுநர் குழு ஆகியவற்றில் உறுப்பினராகப்
பணியாற்றியுள்ளார். மேலும் பல்வேறு இதழ்கள், அமைப்புகளிலும் முக்கியப் பொறுப்பேற்று தனது
பணியை செவ்வனே செய்துள்ளார்.

தமிழகஅரசின் ‘பாவேந்தர் பாரதிதாசன் விருது’ (1997) உட்பட60-க்கும் மேற்பட்ட விருது
களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். இலங்கை, மலேசியா,சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச்
சென்று ஆய்வுக் கட்டுரைகள் வாசித்துள்ளார்.