| Profession | அறிஞர் |
|---|
கடலூர் பண்ருட்டி காட்டுக்கூடலூர் மதுரா நண்டுக்குழி என்ற சிற்றூரில் சோ.கோவிந்த சாமி –
சிவகாமி தம்பதியர்க்கு 15.11.1940 அன்று பிறந்தார்.
உள்ளூர் திண்ணைப் பள்ளி, காட்டுக்கூடலூர் ஆரம்பப் பள்ளி, மேலக்குப்பம் நடுநிலைப் பள்ளி,
திருப்பாதிரிப்புலியூர் புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் பள்ளிக் கல்வியை
முடித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1958-60இல் இளங்கலை பட்டப் படிப்பில் வரலாறு, பொருளாதாரம்
பாடங்களைப் படித்தார். தமிழில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி யடைந்து
பரிசு பெற்றார். பின்னர், பேராசிரியர் முத்துச் சண்முகனார் வழிநடத்த ‘நரிக்குறவர்
மக்களின் பேச்சு மொழிக்கான வரைவிலக்கணம்’ கிளைமொழியியல், இரு மொழியம், நரிக்குறவப்
பழங்குடி மக்கள், முனைவர் ச.அகத்திலிங்கனாருடன் இணைந்து ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ஏழு மாணவர்கள் முனைவர் பட்டம் பெறவும், முப்பது மாணவர்கள் முதுகலை பட்டம் பெறவும்,
இருவர் இளம் முனைவர் பட்டம் பெறவும் வழிகாட்டியாக செயலாற்றினார். இவ்வாய்வு
மாணவர்களுக்கு பழங்குடி யின மக்களின் மொழியை ஆவணப்படுத்தவும், இலக்கணம் மற்றும்
அகராதிகளை உருவாக் கவும் வழிகாட்டினார்.
1972-இல் சென்னை திருவல்லிக்கேணி வாசு தேவன் – கண்ணம்மாள் தம்பதியரின் மகள்
கே.வி.இராஜகுமாரியைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு
மகன்.
1970-இல் வருகைதரு பேராசிரியராக இங்கிலாந்து சென்றார். அங்கு மொழி ஆய்வு மேற்
கொண்டார். 1982-இல் அல்ஜீரியா சென்று அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வழங்கினார்.
துனிசியா, கனடா போன்ற நாடுகளுக்கும் சென்று சிறிது காலம் பணியாற்றினார்.
1967-இல் மொழியியல் துறையில் விரிவுரையாளராகப் பணியேற்றவர், 34 ஆண்டுகள் பணியாற்றி
2001-இல் பணிநிறைவு பெற்றார். அதன் பின் புதுவை மாநிலத்திலுள்ள ஃபிரெஞ்சு நிறுவனம்
நடத்திய கோடை காலத்து தமிழ் வகுப்புகளை நடத்தினார். ஐரோப்பிய, உருசிய
நாடுகளிலிருந்து வந்த மாணவர்களுக்கு தமிழைக் கற்பித்தல் போன்ற மற்றும் பல பணிகளைச்
செய்து வருகிறார்.