பேராசிரியர் கி.அரங்கன்

பேராசிரியர் கி.அரங்கன்

Profession அறிஞர்

Biography

விழுப்புரம் சின்னசேலத்தில் கிருட்டிணசாமி – இராசம்மாள் தம்பதியருக்கு பிறந்தார்.

சின்ன சேலம் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தார். திருச்சி ஜமால் முகமது
கல்லூரியில் 1960-இல் புகுமுக வகுப்பை முடித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1963-இல்
பி.ஓ.எல். பட்டத்தையும், 1965-இல் எம்.ஏ. (மொழியியல்) ‘ஆங்கிலம் வேற்றுமொழி
இலக்கணம்)என்றதலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.

1970- 1982 ஆண்டுகளில் மைசூரில் உள்ள ‘இந்திய மொழிகள் நடுவண் நிறுவன’த் தில் ஆய்வு
உதவியாளராகப் பணியில் சேர்ந்து விரிவுரையாளர், இளநிலை ஆய்வு அலுவலர், இணை
பேராசிரியர், ஆய்வு அலுவலர் ஆகிய பொறுப்பு களை வகித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழக மொழியியல் துறையின் முதல் பேராசிரியராக அமர்ந்தார். 10-க்கும்
மேற்பட்ட எம்ஃபில், முனைவர் பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

அண்ணாமலை, சென்னை, மதுரை காம ராசர், லக்னோ, உஸ்மானியா, தெலுங்கு, வேங்க டேஸ்வரா,
பொகாம்பூர், கர்நாடகம், கான்பூர் ஆகிய பல்கலைக் கழகங்களின் பாடத்திட்டக் குழுவிலும்,
எம்.ஏ., எம்ஃபில், பி.எச்.டி. தேர்வாளர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழில் 4 நூல்களும், ஆங்கிலத்தில் 7 நூல்களும் வெளிவந்துள்ளன. கட்டுரைகள் 38
ஆங்கிலத்திலும், 49 தமிழிலும் வெளிவந்துள்ளன.

அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் முதலிய நாடுகளுக்கு இலக்கியப் பயணம்
செய்துள்ளார். பழங்குடி மக்களின் மொழி குறித்த ஆய்வுக்காக ஒரிசா, ஜம்மு காஷ்மூர்,
அந்தமான் நிக்கோபார் பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார்.

1976-இல் அமெரிக்காவிலுள்ள மாசாசு செட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் வருகைதரு சேர்ந்து
உலகப் புகழ் பெற்ற மொழியியல் பேராசிரியர்களான நோம் சோம்ஸ்கி, ஜான் இராபர்ட் ராஸ், மோரிஸ்
ஹாலெ, பால் கிட்பார்ஸ்கி, பெர்ல் மட்டர் ஆகியோரிடம் பாடம் கேட்கும் வாய்ப்பைப் பெற்றார். நோம்
சோம்ஸ்கி அறிமுகப்படுத்தி, வளப்படுத்திய மாற்றிலக்கண மொழியியல் தளத்தில் 25 ஆண்டு
களுக்கு மேலாக தனியாத ஆர்வத்துடன் உழைத்துத் தமக்கென ஓரிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்திய மொழியியல் கழகம் (புனே), திராவிட மொழியியல் கழகம் (திருவனந்தபுரம்),
அனைத்திந்திய தமிழ் மொழியியல் கழகம் (அண்ணாமலை நகர்), இந்திய சமூக அறிவியல் கழகம்
(அலகாபாத்) ஆகியவற்றில் வாணாள் உறுப்பினராக இருப்பதோடு, அவற்றின் பல்வேறு பொறுப்புகளை
வகித்துள்ளார்.

2003-இல் தஞ்சை ஆய்வியல் கழகம் இவருக்கு மணி விழா நடத்தியது.