| Profession | அறிஞர் |
|---|
மகாகவி பிறந்த எட்டையபுரத்தில் பிறந்தவர். பெற்றோர்: அ.சீனிவாசன்- சீ.சீனியம்மாள். மனைவி:
ரேவதி.
தூத்துக்குடி சுப்பையா வித்தியாலயாவில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், தூத்துக்குடி
வ.உ.சி. கல்லூரியில் பி.ஏ., பி.எட்., பட்டங்களையும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்
எம்.ஏ. பட்டத்தையும் பெற்று, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ‘வானொலி வளர்த்த
தமிழ்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டத்தையும் பெற்றார்.
1972-இல் எட்டையபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியை ஏற்றார். 1976-இல்
சென்னை அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளர் பணியில் சேர்ந்து, பதவி
உயர்வு பெற்று திருச்சி வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆனார். பின்னர்,
பாண்டிச்சேரி வானொலி நிலையத்தில் சில ஆண்டுகள் பணியாற்றி, பதவி உயர்வு பெற்று
தூத்துக்குடி வானொலி நிலையத்தின் இயக்குநரானார். பின்னர், கோழிக்கோடு, ஊட்டி வானொலி
நிலை யங்களின் இயக்குநராகப் பணியாற்றி, மதுரை தொலைக்காட்சி நிலைய இயக்குநராகவும்
(பொ) பணியாற்றி 2006-இல் பணி நிறைவு பெற்றார்.
சென்னை வானொலியிலிருந்து தென்கச்சி கோ.சாமிநாதன் ஓய்வு பெற்றபின் அவரது ‘இன்று ஒரு
தகவல்’ உரையை இவர் தொடர்ந் தார். அவ்வுரைகள் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மேலும்,
‘சாதகப் பறவைகள்’ (சிறுகதைகள்), ‘நகைச்சுவை நந்தவனம்’, ‘பாரதி பாடல்களில் சமுதாயம்’,
‘நம்மை நாமே செதுக்கு வோம்’, ‘வாங்க சிரிச்சிட்டுப் போகலாம்’, ‘வாய் விட்டுச் சிரிக்க
வாழ்வியல் நகைச்சுவைகள்’, ‘சிகரங்களைத் தொட சிந்திக்கலாம் வாங்க’, ‘இதயம் கவரும் எண்ணச்
சிறகுகள்’, ‘நீங்களும் மகுடம் சூடலாம்’, ‘நீங்களும் சிகரம் தொடலாம்’, ‘நீங்களும் வாகை
சூடலாம்’, ‘நீங்களும் சொற் பொழிவாளர் ஆகலாம்’, ‘ஆன்மீகம் அறிவோம்’, ‘வானொலி வளர்த்த
தமிழ்’, ‘பெருந்தலைவர் காமராஜர்’, ‘தியாகசீலர் கக்கன்’ ஆகிய நூல் களையும் எழுதினார்.
இவரது பன்முகப் பணியைப் பாராட்டி தமிழ் நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது, அழகப்பா
பல்கலைக் கழகத்தின் ‘டாக்டர்’ பட்டம், அகில இந்திய வானொலி நிலையத்தின் ‘ஆகாஷ்வாணி’
விருது, கிருபானந்த வாரியாரின் ‘நகைச்சுவை மாமன்னர்’ விருது, குன்றக்குடி
அடிகளாரின் ‘கலைச்செல்வர்’ விருது, மேலும் ‘இன்றைய பாரதி’ (பிரான்ஸ்), ‘இன்சொல்
வேந்தர்’ (தாய் லாந்து), ‘சமய உரைச் சக்கரவர்த்தி’ (ஜெர்மனி), ‘ஆன்மிகச் சுடர்’ (கனடா),
‘இலக்கியச் செம்மல்’ (லண்டன்), ‘கவிச்செம்மல்’ (பாரிசு), ‘நகைச்சுவை சித்தர்’
(மலேசியா), ‘சிரிப்புச் சிகரம்’ மற்றும் ‘அறநெறிச் செம்மல்’ (சிங்கப்பூர்), ‘சிந்தனைச்
சுரங்கம்’ (கலிபோர்னியா), ‘விவித கலா வித்தகர்’ (இலங்கை), ‘வாழ்நாள் சாதனையாளர்
விருது’ (புதுச்சேரி), ‘நகைச்சுவை இமயம்’ (சென்னை) என சர்வதேச அளவிலான
விருதுகளைப் பெற் றுள்ளார். எழுதுவதையும், சொற்பொழி வாற்று வதையும் தொய்வின்றி
தொடர்ந்தார்.
இவர் 20.12.2021-இல் மதுரை ஆண்டாள் புரம் அக்கினி வளாகத்தில் காலமானார்.