பேராசிரியர் இராம.இராமநாதன்

பேராசிரியர் இராம.இராமநாதன்

Profession அறிஞர்

Biography

திருச்சி, அரிமளத்தில், மு.பெ.இராமநாதன் -நாச்சியம்மை தம்பதியருக்கு 07.07.1933
அன்று பிறந்தார்.

மாணவப் பருவத்திலேயே பேச்சாற்றல் கொண்ட இவர், சென்னை இலயோலா கல்லூரி யில் இடைநிலை
வகுப்பில் படிக்கும்போது, இலங்கை சென்று பேச்சுப் போட்டியில் வென்று ‘வெள்ளிக் கோப்பை’
யுடன் தமிழகம் திரும்பினார். அதற்காக சென்னை மயிலாப் பூரில் பாவேந்தர் பாரதிதாசன்
தலைமையில் ஒரு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட் டது. இவ்விழாவில் கலை வாணர்
என்.எஸ்.கிருஷ்ணன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, அன்புப்பழம் நீ போன்றவர்கள் பங்கேற்றுப்
பாராட்டினர்.

பாவேந்தர் பரிந்துரையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்றார்.
அங்கே ‘முத்தமிழ்’, ‘செந்தமிழ்’ எனும் இதழ்களுக்குப் பொறுப்பாசிரியராக பணியாற்றினார்.

1958-இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார்.

இரா.இராமநாதனுக்கு ருக்மணி என்பவ ருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு வர
இயலாத தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன், புதுமணத் தம்பதியரை தனது
இல்லத்திற்கே அழைத்து விருந்தளித்து சிறப்பித் தார். இத்தம்பதியருக்கு இரண்டு ஆண்
குழந்தைகள்.

புதுக்கோட்டை, கும்பகோணம், ஊட்டி அரசுக் கலைக் கல்லூரிகளில் பணியாற்றிய இவர், 1985-இல்
அழகப்பா பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது முதல் அதன் தமிழ்த் துறையில் பேராசிரியராகப்
பணியாற்றி 1993-இல் பணி நிறைவு பெற்றார்.

அழகப்பா பல்கலைக் கழகத்தில் இராம. இராமநாதன் – ருக்மணி இராமநாதன் என்னும் பெயரில்
அறக்கட்டளை நிறுவி, சிலப்பதிகாரச் சொற்பொழிவுகளை வழங்கியுள்ளார். அறவாணன் ஆராய்ச்சி
அறக்கட்டளையுடன் இணைந்து சிலப்பதிகாரக் கருத்தரங்குகளை நடத்துகிறார். ‘சிலப்பதிகார
அறக்கட்டளை’ நிறுவி, தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களில்
கண்ணகி விழாச் சிறப்புக் கருத்தரங்குகளை நடத்தினார்.

பாரதப் பிரதமர் ஜவகர்லால் நேருவுடன் தமிழ் இலக்கியம் குறித்துப் பத்து நிமிடங்கள் பேசும்
வாய்ப்பு பெற்ற இவர், ‘இருபதாம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாறு’, ‘சிலம்பில் சில
புதிய பார்வைகள்’, ‘ஒற்றைச் சிலம்பு’, ‘புரட்சிக் கவிஞருடன்’ என நான்கு நூல்களைப்
படைத்துள்ளார். அறவாணர் ஆராய்ச்சி அறக் கட்டளை பரிசு, ‘தமிழ்மாமணி’, ‘சிலம்புமாமணி’
உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.