பேராசிரியர் அ.ராமசாமி

பேராசிரியர் அ.ராமசாமி

Profession அறிஞர்

Biography

மதுரை உசிலம்பட்டிக்கு அருகிலுள்ள தச்சபட்டி கிராமத்தில் 17.02.1959-இல் பிறந்தார்.

அம்மாவின் சித்தப்பா படுத்தபடுக்கையாக இருந்தபோது அவருக்கு விராட பர்வம், சக்கரவர்த்தி
திருமகன், ஆதி பர்வதம் ஆகியவற்றை படித்துச் சொல்வார். அம்மாவின் விதவை சின்னம்மாக்களுக்கு
புராண இதிகாசப் புத்தகங்களைப் படித்துச் சொல்வார். இப்படி யாக இவரது புத்தக வாசிப்பு
தொடங்கியிருக்கிறது.

அமெரிக்கன் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்
முதுகலைப் பட் டமும் பெற்றார். இப்பல்கலைக் கழகத்திலேயே ‘நாயக்கர் காலத் தமிழ் இலக்கியங்கள்
காட்டும் சமுதாயம்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தி.சு.நட ராசன்
இவரது ஆய்வுக்கு வழிகாட்டி.

பல்கலைக்கழக ஆசிரியர் மு.ராமசாமியின் ‘நிஜநாடக இயக்க’த்தில் இணைந்து பத்தாண்டுகள்
பணியாற்றி நாடகக்காரர் ஆனார்.

1987 முதல் மதுரை அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகவும்,
1989 முதல் புதுவைப் பல்கலைக் கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகர்நிலைப்பள்ளியில்
விரிவுரையாளராகவும்,1997 முதல் நெல்லை மனோமணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தமிழியல்
துறையில் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றி, பின்னர் 2005 முதல் பேராசிரியராகப்
பணியாற்றினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங் கிணைப்பாளர்,
பதிப்புத் துறை ஒருங்கிணைப் பாளர், செய்திமடல் வெளியீட்டாளர், அம்பேத் கரியல் மையத்தின்
இயக்குநர், தமிழியல் துறை யின் துணைத்தலைவர், இந்திய மற்றும் அயல் மொழிகள் பிரிவின் புல
முதன்மையர், மொழித் துறைகளின் கல்வி ஆய்வுப் பணிகள் ஒருங்கி ணைப்பாளர், நூலகப்
பொறுப்பாளர், மருத்துவ மையத்தின் ஒருங்கிணைப்பாளர், அலுவலக ஒருங் கிணைப்பாளர், மனோ
கல்லூரிகளின் ஒருங் கிணைப்பாளர், ஆய்வுத்துறை ஒருங்கிணைப் பாளர் என பல்வேறு பொறுப்புகளை
அடுத் தடுத்து ஏற்று சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

சௌதி அரேபியா, ஹங்கேரி, ஆஸ்திரேலியா, டென்மார்க், போலந்து, சிங்கப்பூர், மலேசியா
போன்ற நாடுகளுக்கு தமிழ் இலக்கிய அமைப்பு களில் சிறப்புச் சொற்பொழிவுகள் நிகழ்த்தவும்,
மேலும் சில காரணங்களுக்காகவும் பயணம் செய்துள்ளார்.

நாடகம், திரைப்படம், ஊடகம், இலக்கியம் சார்ந்த 20 நூல்களை எழுதியுள்ளார். தொகுப்பா
சிரியராகவும், பதிப்பாசிரியராகவும் 5 நூல்களைத் தந்துள்ளார்.

திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக ‘தகைமை சால்
ஆசிரியர் விருது’, பணியிடத்தில் பாகுபாடு களைக் கலையும் நோக்கங்கொண்ட ஆசிரியருக் கான
‘நிகர்நிலை விருது’ போன்ற பல விருது களைப் பெற்றுள்ளார்.