| Profession | அறிஞர் |
|---|
விழுப்புரம் கள்ளக்குறிச்சி தியாகதுருக்கத்தில் ப.அரங்கநாதன் – பழனி யம்மாள்
தம்பதியருக்கு 22.5. 1954-இல் பிறந்தார். தந்தை மைய, மாநில அரசுகளின் நல்லாசிரியர்
விருதுகளைப் பெற்ற தமிழாசிரியர்.
கடலூர் அரசினர் கலைக் கல்லூரியில் 1970-இல் பி.யூ.சி. படித்தார். சென்னைப் பச்சையப்பன்
கல்லூரியில் 1974-இல் இளங்கலை தமிழ் (பி.ஏ.) பட்டத்தையும், 1976-இல் முதுகலை தமிழ்
(எம்.ஏ.) பட்டத் தையும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேரா.சி. பாலசுப்பிரமணியன்
மேற்பார்வையில் ‘பாரதி தாசனின் படைப்புகளில் நகைச்சுவை’ என்ற தலைப்பில் ஆய்வு மேற்
கொண்டு எம்ஃபில் பட்டத் தையும், ‘சங்க இலக்கியத்தில் வேந்தர்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து
1982-இல் முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1983-84 ஓராண்டு காலம் உலகத் தமிழாராய்ச்சி
நிறுவ னத்தில் வட ஆற்காடு மாவட்ட ஊர் பெயர்கள் பற்றி ஆய்வு செய்து உயர்நிலை ஆய்வாளராகப்
பணிபுரிந்தார். இக்கால கட்டத்தில் ரூ.10,000 திரட்டி மு.வ. அறக்கட்டளை அமைய காரணமாய்
இருந்தார்.
1984-இல் திருமணம். ஒரே வாரத்தில் சென்னைப் பல்கலைக் கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவனத்தில்
தமிழ் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்து 28 ஆண்டுகள் அங்கே பணியாற்றினர். 1992-இல்
இணைப் பேராசிரியராகவும், 1997-இல் பேராசிரியராகவும் பணி உயர்வு பெற்று, 2010-இல்
மொழித்துறை பேராசிரியராக பணியிடை மாற்றம் பெற்றார். 2012-இல் தமிழ் மொழித்துறையின்
தலைவராகப் பொறுப் பேற்றார். தாம் படித்த அதே தமிழ் மொழித் துறைக்குத் தலைவராகப்
பொறுப்பேற்றார். இலக்கிய விழாக்களையும், அறக்கட்டளை சொற் பொழிவுகளையும் தொடர்ந்து
நடத்தினார். சென்னை பல்கலைக்கழகத்தின் 150-ஆம் ஆண்டு விழாவையொட்டி 150 நூல்களைப்
பதிப்பித்து வெளியிட்டார்.
இவரது மேற்பார்வையில் 33 ஆய்வாளர்கள் முனைவர் பட்டமும், 30 ஆய்வாளர்கள் ஆய்வியல் நிறைஞர்
பட்டமும் பெற்றுள்ளனர்.
‘பாரதிதாசன் படைப்புகளில் நகைச்சுவை’ தொடங்கி ‘திருக்குறளில் சித்தர் நெறி’ வரை
யிலான 28 நூல்களின் ஆசிரியர்; 4 நூல்களின் பதிப்பாசிரியர்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் ஏழாம் வகுப்பிற்கான பாடநூல் தயாரிப்புக்குழுத் தலைவராக
1994 – 95இல் பணியாற்றினார்.
30-க்கும் மேற்பட்ட முறை பல்வேறு நாடுகளுக்குக் கல்விப் பயணம் மேற்கொண்டுள்ளார். பெரிய
புராணம், திருவாசகம் குறித்து 8 முறை 108 வாரங்கள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தி
‘கின்னஸ் சாதனை’ படைத்துள்ளார்.
‘சித்தர் இலக்கிய மையம்’ ஒன்றை உருவாக்கி, 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சென்னை
அசோக்நகர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளியில் மாதந்தோறும் முதல் புதன் கிழமை மாலை
சொற்பொழிவு ஆற்றுகிறார்.