நெல்லை சு.முத்து

நெல்லை சு.முத்து

Profession அறிஞர்

Biography

திருநெல்வேலி எம்.சுப்பிரமணிய பிள்ளை -எம்.சொர்ணத்தம்மாள் தம்பதியருக்கு 10.5.1951-இல்
பிறந்தார். தந்தையாருக்கு கோவையில் வசித்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுடன் நட்புறவு
இருந்தது.

திருநெல்வேலியில் பள்ளிக்கல்வியையும், பாளையங்கோட்டை தூய சவேரியர் கல்லூரியில் புகுமுக
கல்வியையும் பயின்றார். 1973இல் மதுரைப் பல்கலைக் கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்ற இவர்,
வேதியியல் பாடத்தில் பல்கலைக் கழகத்திலேயே இரண்டாவது இடத்தில் தேர்ச்சியடைந்தார்.

1973இல் தனது 22ஆவது வயதில் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில்
வேலையில் சேர்ந்தார். 19.4.1976 அன்று இவருக்கும் தேனி மாவட்டம் கண்டமனூர் மரகதத்திற்கும்
திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியருக்கு பாலசுப்பிரமணியன், கலைவாணி என இரு
குழந்தைகள்.

1992இல் திருவனந்தபுரத்தில் தனது மனைவியுடன் ஸ்கூட்டரில் செல்லும்போது கார் மோதி
நிகழ்ந்த ஒரு விபத்தில் இவரது வலது கால், இடுப்பு, தொடை எலும்புகள் எல்லாம் நொறுங்கின.
மூன்று ஆண்டுகள் சிகிச்சையில் கடும் துன்பங்களை அனுபவித்து மீண்டார். 1997ல் சிதம்பரம்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ‘தமிழக அறிவியல் மாநாடு’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு
சென்னைக்கு ரயிலில் செல்லும்போது ‘பந்த்’ கலவரக் கல்லெறிதலில் மகளின் ஒரு கண்ணை
இழக்கும்படி ஆயிற்று. மகளின் மருத்துவப் பராமரிப்பிற்காக சென்னை அருகே ஸ்ரீ ஹரிகோட்டா
சத்தீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்குப் பணிமாற்றம் பெற்றார். அங்கு ‘திண்ம உந்து
எரி பொருள் திட்டத் தொடர்புக்குழு’ மேலாளராகப் பணியாற்றினார்.

2008 இல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள இந்திய
விண்வெளி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் பெற்று, ஏறத்தாழ 38 ஆண்டுகள் பணி. .

அறிவியல் நூல்கள், அறிவியல் புதினங்கள், அறிவியல் கவிதைகள், அறிவியல் மொழிபெயர்ப்
புகள், கவிதை மொழிபெயர்ப்புகள், பொது அறிவு நூல்கள் என 100க்கும் மேற்பட்ட நூல்களை
எழுதியுள்ளார்.

தேசிய அறிவியல் விருது, தமிழக அரசு பரிசு, பாரதிதாசன் நூற்றாண்டு விழா
கௌரவிப்பு, கேரளப் பல்கலைக்கழக தமிழ்த் துறை பொன்விழா நினைவுப் பரிசு, ஹெர்மன் குண்டர்ட்
விருது, சென்னை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் சிறந்த எழுத்தாளர் விருது
போன்ற பல்வேறு விருது களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.