தமிழறிஞர் எம்.கே.நாதன்

தமிழறிஞர் எம்.கே.நாதன்

Profession அறிஞர்

Biography

மார்த்தாண்டம் பிள்ளை – கோமதி அம்மாள் தம்பதியருக்கு 1931-இல் பிறந்தார் எம்.கே.நாதன்
(என்கிற) எம்.காந்திமதிநாதன்.

1951-இல் திருவனந்தபுரம் அரசு கலைக் கல்லூரியில் இன்டர்மீடியட் சேர்ந்தார். குடும்பச் சூழல்
காரணமாக ‘தினமலர்’ நாளிதழில் உதவி ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தார். பணியில் இருந்து
கொண்டே போபால் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் படித்து இதழியலில் இளங் கலைப் பட்டம்
பெற்றார்.

கேரள அரசு அச்சகத்தில் தமிழ்ப் பிழை திருத்தும் பணியில் சேர்ந்தார். பின்னர், பப்ளிக் சர்வீஸ்
கமிஷன் தேர்வு எழுதி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை முன்சீப் கோர்ட்டில் குமாஸ்தா ஆனார்.

சினிமாத் துறையில் நுழையும் விருப்பத்தில் அவ்வப்போது சென்னைக்குச் சென்று சினிமா
கம்பெனியினரைச் சந்தித்து வந்தார். ‘ராயல் ஸ்டுடியோ’ தயாரித்த ‘தேவசுந்தரி’ படத்திற்கு
கதை, வசனம் எழுதும் வாய்ப்பு தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் குமாஸ்தா வேலையை
ராஜினாமா செய்துவிட்டு, சென்னை சென்று ராயல் ஸ்டுடியோவில் தங்கினார். திரைப்படத் தொழில்
நுட்பங்களை ஓரளவு கற்றுக் கொண்டார். குடும்பச் சண்டையினால் திடீரென ராயல் ஸ்டுடியோ
மூடப்பட்டது.

‘மர்மக்கதை’ இதழில் உதவி ஆசிரியர் ஆனார். மர்ம நாவல்களை எழுதினார். பதிப்ப கங்கள்
வெளியிட்டன. ஆயிரக்கணக்கான வாசகர்களின் மனங்களில் இடம் பிடித்தார்.

1959-இல் இவரது கதையில் ‘எங்கள் குலதேவி’ திரைப்படம் சேலம் மார்டர்ன் தியேட்டர்ஸ் மூலமாக
வெளிவந்தது. மார்டன் தியேட்டர்ஸ் கதை இலாகாவில் முக்கிய நபரானார். மார்டன் தியேட்டர்ஸின்
‘கண்டம் பெச்ச போட்டு’ எனும் முதல் கன்னடப் படத்திற்கு திரைக்கதை எழுதினார்.

15.9.1960 அன்று நெல்லை மாவட்டம் தாழைக் குளம் கமலாவுக்கும் இவருக்கும் திருமணம்
நடைபெற்றது. இத்தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர்: கோமதி.

மீண்டும் திருவனந்தபுரத்திற்குத் திரும்பினார். 1967-இல் ‘பெண்படை’ எனும் படத்திற்கு
திரைக்கதை எழுதினார். நாடகத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்திருக்கிறார்.

இதுவரை 9 திரைப்படங்கள், 135க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 5 சமூக நாவல்கள், 15-க்கும்
மேற்பட்ட மேடை நாடகங்கள், 37 மர்ம நாவல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், சில திரைப் படப்
பாடல்கள் ஆகியவற்றை எழுதியுள்ளார். இவரது ‘மணல்வீடு’, ‘வாரிசு’ ஆகிய இரு நாடகங்
களும் பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றன.

சிறந்த சிறுகதைக்காக திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விருது, கேரள முற்போக்கு கலை
இலக்கிய சங்கம், திருவிதாங்கூர் ஸ்ரீ கிருஷ்ணா நாட்டிய சங்கீத அகாதெமி, கேரள தமிழ்ப்
பேரவை ஆகிய அமைப்புகள் கேடயங்கள் வழங்கிச் சிறப்பித்தன.