| Profession | அறிஞர் |
|---|
இராஷாதுகான் – தஜுன்னியம்மாள் தம்பதியருக்கு 10.5.1963 அன்று பிறந்தார். இவரது தந்தை
மலாயாவையும், தாயார் இந்தியாவையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தந்தை கணக்காய்வாளர்.
கோலாலம்பூரில் உள்ள அப்பர் தமிழ்ப் பள்ளியிலும், பின்னர் பினாங்கு ஐக்கிய முஸ்லிம் தமிழ்ப்
பள்ளியிலும் தம் ஆரம்பக் கல்வியைப் பயின்றார். பின்பு, கோலாலம்பூர் சுங்காய் பீசி தமிழ்ப்
பள்ளியில் மூன்று ஆண்டுகள் கல்வி கற்றார்.
தனது இடை நிலைக் கல்வியை டத்தோ லொக்மான் இடைநிலைப் பள்ளியில் தொடர்ந்தார். மூளை
ஆராய்ச்சி கழகத்தில் பயின்று மூளையியலில் இள நிலைப்பட்டத்தையும், தொடர்ந்து அமெரிக்காவில்
பட்டத்தையும் பெற்றார். மேலும், மனவியல், சத்துணவு, அதீத மனவியல் ஆகிய மூன்று துறைகளில்
டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
தன்முனைப்புப் பயிலரங்கை கோலாலம்பூர் வட்டாரத்தில் ஆரம்பித்து சிங்கப்பூர், மியன்மார்,
இந்தியா, லண்டன் ஆகிய நாடுகளில் பல கருத்தரங்குகளையும் பயிற்சிகளையும் நடத்துகிறார்.
தமிழ்ப் பள்ளிகளைத் தத்தெடுத்து தேர்வை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு படிக்கும் முறையைக்
கற்பித்தல், தன்முனைப்புச் சிந்தனைகளை வழங்குதல், பெற்றோருடனான சந்திப்பு போன்ற வற்றை
நடத்தி வருகிறார்.
மலேசிய அரசினால், இந்திய கைதிகளுக்கு தன்னம்பிக்கை மனவியல் சிறப்பு இலவசப் பயிற்சிகளை
வழங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய காவல் துறை உயரதிகாரிகளுக்கு விசேஷ பயிற்சிகளை
வழங்கியுள்ளார். உலகிலுள்ள எட்டு பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக
அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இவருடைய மனைவி தஸ்லிமா. இரு மகள்கள். இருவரையும் தமிழில் படிக்க வைத்திருக்கிறார்.
இருவரும் பரதம் பயில்கின்றனர்.
மனம் திறக்கட்டும், உங்களுக்குள் ஒரு மருத்துவர், ஆரோக்கிய வாழ்வின் இரகசியங்கள்,
மனோசக்தியும் வாழ்க்கையின் வெற்றியும், உங்களுக்குள் ஒரு வெற்றியாளன், வெற்றி உங்கள்
கையில், மனமே நீ கலங்காதே, ஆழ்மன ஆற்றலும் பிரபஞ்ச சக்திகளும், உங்களுக்குள் ஒரு தலைவர்,
மனமே மாபெரும் கம்ப்யூட்டர் கவனகம், பாரதியார் கண்ட தன்முனைப்பு, நமது வாழ்க்கையின்
வெற்றிக்கு சிரிப்பும் சிந்தனையும் ஆகிய நூல்களை தமிழிலும், ஆங்கிலத்திலும்
எழுதியுள்ளார். சர்வதேச பல்கலைக் கழகங்களில் இவரின் ஆரோக்கியம் மற்றும் மனோசக்தி தொடர்பான
புத்தகங்கள் தங்கப் பதக்க விருதுகளைப் பெற்றுள்ளன.
‘இப்டா’ (மிதிஜிகி) நிகழ்ச்சியின்வழி உலகத் தமிழர்களைக் கவர்ந்த சிறந்த தொலைக்காட்சி
படைப்பாளர் என்ற விருதினைப் பெற்றுள்ளார்.