ச.கந்தையபிள்ளை

ச.கந்தையபிள்ளை

Profession arignar

Biography

யாழ்ப்பாணம், இருபாலை அடுத்த கோவை என்றழைக்கப் படும் கோப்பாய் எனும் ஊரில், சபாபதி
பிள்ளை – காமாட்சி அம்மையார் தம்பதியருக்கு 1880 ஆனி மாதம் பிறந்தார்.

கோப்பாயிலுள்ள ஸி.எம். எஸ். பள்ளியிலும், கண்டிக்குளி யிலுள்ள பரி.கோவான் கல்லூரி
யிலும் ஆங்கிலம் கற்றுத் தேர்ந் தார். சிற்.கைலாயப் பிள்ளை யிடத்து தமிழ் இலக்கண, இலக்
கியங்கள் மட்டுமின்றி தருக்க நூல்களையும் கற்றுத் தேர்ந்தார்.

ச.கந்தைய பிள்ளை தமது 28-வதுவயதில் கந்தரோடை க.தியாகராசப் பிள்ளையின் மகளாகிய
செல்லம்மாளைத் திருமணம் செய்து கொண்டார்.

கொழும்பில் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரிய ராகப் பணியாற்றினார். இலங்கை அரசு
அக்கல்லூரியில் தமிழாசிரியர் மாணவர்களுக்குரிய வகுப்புகளை நடத்துவதை நிறுத்தியது.
ஆயினும் அரசின் வித்யாபகுதி க்கந்தோரில் மொழிபெயர்ப்பாள ராகவும், தமிழ்ப்பாடத் திட்டங்கள்
வகுப்பவராகவும், தமிழ்த் தேர்வுகளுக் கான தேர்வாளராகவும் பல்வேறு பணிகளை இவருக்கு
வழங்கியது. தன்னுடைய அரிய முயற்சியினால் குமாரசாமிப் புலவரைக் கொண்டு இராமோதந்தம்,
சிசுபால சரிதம், இரகுவம்ச சரிதாமிர்தம், இதோபதேசக் கதைகள் ஆகிய நூல் களை அச்சிட்டு
வெளியிட்டார்.

1922இல் விருப்ப ஓய்வு பெற்று, தமிழுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அதே
ஆண்டு சென்னையை வந்தடைந்தார்.

சி.வி.ஜம்புலிங்கம் பிள்ளையுடன் வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகிறது. உ.வே.சாமிநாதய்யர்,
திரு.வி.க. ஆகியோருடன் நட்புறவுடன் பழகி வந்துள்ளார். சில நாள்களுக்குப் பின் தன் உள்ளு
ணர்வின் உந்துதலால் சென்னையிலிருந்து திருக் கழுக்குன்றம் சென்றார். அங்கு மாணாக்கர்
பலருக்குத் தமிழ்ப் பாடங்களைக் கற்பித்தார்.

இவரிடம் கல்வி கற்ற ஒரு சிறுவனின் கனவில் திருக்கழுக்குன்றத்து அம்பாள் கோகிலாம்பிகை
தோன்றி இவரை புதுச்சேரிக்குச் செல்லும்படி பணித்தாள். அதன்படி புதுச்சேரிக்குச் சென்று
தலையிலும் கழுத்திலும் உத்திராட்ச மாலைகளு டனும் இடையில் வேட்டியையும் அணிந்து, சட்டை
அணியாமல் அம்பலத்தாடையர் மடத்து வீதியில் சென்றுகொண்டிருந்த இவரை, 4-ஆம் இலக்க வீட்டில்
வசித்த நாகரத்தினம் பிள்ளை கண்டு,’இது கனவா? நனவா?’ என வியந்து அவரை வரவேற்றார்.

காரணம், இதே உருவம் அவர் கனவில் முந்தைய நாள் காட்சியளித்தது. ஆகவே அவர்
குடும்பத்தினருடன் இவரை வரவேற்று இலக்கம் 2-இல் உள்ள ஈசான்ய நிலையம் என்னும் தங்களின்
மற்றொரு இல்லத்தில் அவர் தங்குவதற்கு இடமும், உணவும் அளித்தனர்.

பண்டிதர் கந்தைய பிள்ளை தமிழகத்தில் உள்ள திருத்தலங்களுக்குச் சென்று இறைவன் இறைவி மீது
பாடல்களைப் பாடி மகிழ்ந்து மீண்டும் புதுவையை அடைந்தார். நாகரத்தினம் பிள்ளை ‘நந்தி
வெளியீட்டு மன்றம்’, ‘வித்தகம் அச்சுக்கூடம்’ நிறுவினார். இவற்றில் ச.கந்தைய பிள்ளை
எழுத்துகளை நூல்களாக வெளியிட் டார். பண்டிதர் ச.கந்தைய பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு
‘வித்தகம்’ இதழை 10.11.1933 முதல் வெளியிடத் தொடங்கினார்.