| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி மாவட்டம், முந்நீர்ப்பள்ளம் அருகில் தெப்பக்குளம் பகுதியில் சிவசுப்பிரமணியப்
பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் 24.05.1866 அன்று பிறந்தார்.
முந்நீர்பள்ளம் திண்ணைப் பள்ளியிலும், மேலைப்பாளை யம், தருவை, சிந்துபூந்துறை ஆகிய
ஊர்களிலுள்ள பள்ளி களிலும் பள்ளிக் கல்வியை முடித்து, சென்னை கிறித்துவக் கல்லூரியில்
எம்.ஏ., எல்.டி. பட்டங்களைப் பெற்றார்.
1890-இல்திருமணம். மனைவி: தாயம்மை. அவருக்குப் பிள் ளைப் பேறு இல்லாததால் 1903 -இல்
பூரணத்தம்மாளை மணந்தார். இவருக்கு சிவசுப்பிர மணியன், இளம்பூரணம் எனும் இரு மகன்கள்,
வள்ளியம்மை என்றொரு மகள்.
பாளையங்கோட்டை, இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.
இரண்டாண்டுகளுக்குப் பின் ஈரோடு மகாசன உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகவும்,
மூன்று மாதங்களுக்குப் பின் எட்டையபுரம் அரண்மனையில் ஆசிரியராகவும், பின்னர் சென்னை
கிறித்தவக் கல்லூரியில் பேராசிரியராகவும, அதன்பின் மதுரை அமெரிக்கன் கல்லூரித்
தலைவராகவும் (பொறுப்பு), இந்துக் கல்லூரியில் ஓராண்டு பேராசிரியராகவும், திருச்சி
பிஷப் ஹீபர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் பணியாற்றி, 1926-இல் பணி நிறைவு பெற்று, தம்
சொந்த ஊரான முந்நீர்பள்ளம் சென்றடைந்தார்.
‘ஞானபோதினி’ மாத இதழை எட்டு ஆண்டுகள் நடத்தினார். 1908-இல் நெல்லையில் ‘காமை சிஸ்
கல்லூரி’யைத் தொடங்கி 1917 வரை நடத்தினார். 1928-இல் ‘மாதிரிப் பள்ளி’ ஒன்றைத்
தொடங்கினார்.
1895-இல் ‘செய்யுட்கோவை’ எனும் தலைப்பில் முதன் முதலாகப் பாடநூல் ஒன்றினைத் தொகுத்து 44
பகுப்புகளில் வெளியிட்டுள்ளார். 1897-இல் ஆங்கிலத்தலைப் பிலான மரியாதைராமன் கதையையும்,
இராயர் அப்பாஜி கதையையும் உள்ளடக்கிய நூலைப் பதிப்பித்தார்.
ஔவைக்குறள், செய்யுட்கோவை, விவேக விளக்கம், வாசகத்திரட்டு, நவராத்திரிப் பிரசங் கங்கள்,
தொல்சிதோயின் (டால்ஸ்டாய்) இரு சிறுகதைகள், சூரபத்மன், ஐரோப்பிய மதம், காமாட்சி,
ஷேக்ஸ்பியரின் பன்னிரு பெண் மணிகள், கதையும் கற்பனையும், தப்பிலி, வைர மணிமாலை,
தமிழும் தமிழ்க் கவிஞர்களும், தமிழ்க் கட்டுரைக் களஞ்சியம், நபிநாயகமும் கவி வாணர்களும்,
மரியாதைராமன் கதையும் இராயர் அப்பாஜி கதையும் அடங்கிய நூல், மருத்துவன் மகள்
(சிறுநாவல்) ஆகிய நூல்களுடன் மாணிக்கவாசகரின் வாழ்வும் வாக்கும், அப்பர் வாழ்வும்
வாக்கும், தமிழ்த்துறவிகள் வாழ்வும் வாக்கும், திருநாவுக்கரசர் திருஞானம் ஆகிய வாழ்க்கை
வரலாற்று நூல்களையும், 32 ஆங்கில நூல்களையும், 5 சட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
பன்முக அறிஞராக விளங்கிய மு.சி.பூரணலிங்கம் பிள்ளை தனது 81-ஆவது வயதில்
16.06.1947 அன்று இயற்கை எய்தினார்.