| Profession | பேராசிரியர் |
|---|
கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் உசரவிளை கிராமத்தில் அரிகிருஷ்ண நாடார் – தங்கப்பழம்
இணையருக்கு 14.04.1933 அன்று நாராயணப்பெருமாள் பிறந்தார்.
பள்ளியில் தொடக்கக் கல்வியையும், நாகர்கோயில் கார்மல் உயர் நிலைப் பள்ளியில் உயர்நிலைக்
கல்வியையும் பயின்றார்.
தாம் பயின்ற லி.வி.ஙி.சி. பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். பாளையங் கோட்டை
செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் பி.ஏ. (வரலாறு) பட்டம் பெற்றார். கேரளா பல்கலைக் கழகத்தில்
தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ. பயின்றார். ச.வே.சு. ஐயர் நெறியாள் கையில் ‘சம்பந்த
முதலியாரின் நாடகம் பற்றிய திறனாய்வு’ என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
இக்காலகட்டத்தில் புலியூர் கிராமத்தில், சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் பெ.ஆனந்தன்
சகோதரி பெ.பஞ்சரத்தின மணி யம்மையை 24.10.1959 அன்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
அ.நா.பெருமாள், கேரள பல்கலைக் கழகத்தில் பகுதிநேர ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்
டிருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ் தீஸ்வரத்தில் அமைந்த விவேகானந்தர் கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். அங்கிருந்து
1974-இல் விலகி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்ட மாணவர்களுக்கு
ஒன்றரை ஆண்டு காலம் பேராசிரியராகப் பணியாற்றிய பின், இயக்குநராகவும், தலைவராகவும்
பணியாற்றி 1991-இல் பணிநிறைவுப் பெற்றார். பணி நிறைவுக்குப் பின்னரும் ஆய்வாளர்கள் பலர்
இவரிடம் வந்து ஆலோசனையும், அறிவுரையும் பெற்றனர்.
அ.நா.பெருமாள் 1969-இல் ‘பனிமொழி’ எனும் கவிதை நாடகத்தையும், ‘இலக்கிய நாடகங்கள்’
எனும் நூலை 1972-லும் வெளியிட்டார். 1975க்குப் பிறகு சென்னையில் வாழ்ந்த காலத்தில்
ஆய்வுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1976க்குப்பின் நாட்டுப்புறக் கலைகளைக் குறித்த
திறனாய்வும், விமர்சனமும் எழுதத் தொடங்கினார்.
ஆங்கில மொழியில் 50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், தமிழில் 250-க்கும் மேற்பட்ட கட்டுரைகள்,
மற்றும் பல இதர ஆய்வுக் கட்டுரை களையும் எழுதினார். 100-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில்
பங்கேற்றார். 40-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட ஏராளமான சிறப்புமிக்க விருதுகளையும்,
பரிசுகளையும், பட்டங்களையும் அரசாங்கத்தாலும் பல்வேறு அமைப்புகளாலும் வழங்கப்
பெற்றுள்ளார்.
துணைவியாரின் இறப்புக்குப் பின் தான் பிறந்து வளர்ந்த பூர்விக இல்லத்திற்குத் திரும்பி சில
ஆண்டுகள் வாழ்ந்து 12.01.2007இல் இறைவனடி சேர்ந்தார்.