| Profession | அறிஞர் |
|---|
திருநெல்வேலி இடைகால் கிராமத்தில் மு.நாகூர்மைதீன்- நா.பாத்திமா தம்பதியருக்கு
24.12.1946-இல் பிறந்தார். இவரது துணைவியார் ம.ஆயிசா என்கிற முகமது இப்ராகிம்
அம்மாள். இவர்களுக்கு மூன்று குழந்தைகள்.
திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இளம் அறிவியல் (கணிதம்), மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் சமயம் மற்றும் தத்து வத்தில் (மெய்யியல்) முதுகலை, சூஃபி இசையில்
இளநிலை ஆய்வாளர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையில் கண் காணிப்பாளராகப் பணியாற்றி 2004-இல் ஓய்வு
பெற்றார். தற்பொழுது குடும்பத்தினருடன் மதுரை மாநகரில் வசித்து வருகிறார்.
இளம் வயதிலேயே புத்தகங்களை வாசிப்பதில் ஆர்வமுடைய இவர், வீ.ப.கா.சுந்தரத்திடம் தமிழிசை
பற்றிய ஆய்வு நெறிமுறைகளை கற்றுக் கொண்டார்.
தமிழிசைத் தளிர்கள் (2006), தமிழிசை வேர்கள் (2008), இழை இழையாய் இசைத் தமிழாய்
(2008), தமிழிசைப் பேரகராதி (2010), ஆதி இசையின் அதிர்வுகள் (2011), தமிழிசை
வரலாறு (2012), ஆபிரகாம் பண்டிதர் (வாழ்க்கை வரலாறு) என ஏழு நூல்களை எழுதியுள்ளார்.
தமிழிசைக்கு முதன்முதலாக பேரகராதியை உருவாக்கியவர் என்ற சிறப்புக்குரியவர்.
திருப்பூர் தமிழ்ச் சங்கம், பொங்கு தமிழ் அறக் கட்டளை, அமெரிக்க பெட்னா, தந்தை பெரியார்
முத்தமிழ் மன்றம், காவ்யா, நெய்வேலி நிலக்கரி நிறுவனம், தமிழ் மாமன்றம், தமிழக அரசு,
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
சென்னை சோமசுந்தரர் ஆகமப் பண்பாட்டு ஆய்வு மன்றம், சுஜாதா அறக்கட்டளை, எஸ். ஆர்.எம்.
பல்கலைக் கழகம், இந்தியத் தொழில் கூட்டமைப்பு (மதுரை), அனைத்துலக இசுலா மியத் தமிழ்
இலக்கிய அமைப்பு (கும்பகோணம்) போன்ற பல்வேறு அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி
சிறப்பித்துள்ளன.
பல்வேறு அமைப்புகள், மக்கள் மேடை, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் என பற்பல இடங்களில்
தமிழிசை குறித்த சொற்பொழிவு களையும், இசை நிகழ்ச்சிகளையும் வழங்கி வரு கிறார்.
வானொலியில் 60-க்கும் மேற்பட்ட தமிழிசை நிகழ்ச்சிகளையும் பேட்டிகளையும் வழங்கியுள்ளார்.
தமிழகத் தொலைக்காட்சி களிலும், மலேசியா, சிங்கப்பூர், சௌதி தொலைக் காட்சிகளிலும்
தமிழிசை குறித்து பேட்டி அளித் துள்ளார். தமிழகம் மட்டுமல்லாது, கேரளா, கோழிக்கோடு,
பாண்டிச்சேரி, புதுதில்லி பல்கலைக் கழகங்களிலும் நிகழ்ச்சிகளையும், ஆய்வுக்
கட்டுகரைகளையும் வழங்கியுள்ளார்.
அமெரிக்கா, வாசிங்டன், அட்லாண்டா, நியூயார்க், கலிபோர்னியா போன்ற நாடுகளில் தமிழிசைச்
சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். தமிழகம் மற்றும் அயலகப் பத்திரிகைகளில் இவரது
தமிழிசைக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ள