| Profession | அறிஞர் |
|---|
கன்னியாகுமரி தாமரைக்குளம் ஹரிகர சுப்பிரமணிய பிள்ளை – விசாலம் தம்பதியருக்கு
19.05. 1951 அன்று பிறந்தார். 2-ஆம் வயதிலேயே அன்னையை இழந்து, தாய் வழித் தாத்தாவின்
அரவணைப்பில் பறக்கையில் வளர்க்கப்பட்டார். பறக்கை, நாகர்கோயில் பள்ளிகளில் பள்ளிக் கல்வியை
முடித்தபின், தென் திருவிதாங்கூரிலுள்ள இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும்,
வேதியியலில் இளம் அறிவியல் பட்டத்தையும் பெற்று, திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகத்தில்
முதுகலைப் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உராய்வு மையத்தில்
முனைவர் ச.அகத்தியலிங்கம், முனைவர் செ.வை.சண்முகம் ஆகியோரின் வழிகாட்டுதலில் ‘தமிழ்
வினை விகுதிகளின் வரலாறு’ எனும் தலைப்பில் ஆய்வு செய்து 1984-இல் முனைவர் பட்டம்
பெற்றார். இதே பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்,
இந்தியில் முதுகலைப் பட்டச் சான்றிதழ், மொழி பெயர்ப்பில் சான்றிதழ் ஆகியனவும் பெற்றார்.
பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவிலுள்ள பஞ் சாபிப் பல்கலைக் கழகத்தில் முனைவர் ப.
வைத்தியநாதன் கீழ் காரைக்குடித் தமிழ்மொழி பற்றி பணியாற்றினார். சிதம்பரம், காரைக்குடி,
பஞ்சாப் மொழிகளை ஆராய்ந்தார்.
1982-இல் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத் தில் இளநிலை ஆய்வாளராகப் பணியேற்றார். தொகுப்பியல்
துறையில் சுந்தரசண்முகனார், பெ.மாதையா ஆகியோருடன் இணைந்து ‘மர இனப்பெயர்த் தொகுதி’
திட்டத்தில் பணியாற்றி இரண்டு தொகுதிகளாக வெளியிட்டனர். அதன் பின் முதுநிலை ஆய்வாளர்,
முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர்,
இணைப்பேராசிரியர், பேரா சிரியர் என படிப்படியாக பணி உயர்வு பெற்று பணியாற்றினார்.
1991-இல் துறைத்தலைவர் பணியில் தொடங்கி 2011-இல் தூய தமிழ் அகர முதலித் திட்டம்
வரையிலான 12 பொறுப்புகளில் சீரிய முறையில் பணியாற்றினார். தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்
திட்டப் பணிகள் மட்டுமின்றி தமிழ் நாடு அரசு, மத்திய செம்மொழி நிறுவனம், புதுதில்லி
மானியக்குழு போன்றவற்றின் திட்டப் பணிகளிலும் சிறப்பாக செயலாற்றினார்.
புத்தொளிப் பயிற்சிகளிலும், பணிப்பட்டறை களிலும் 35 சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், பாரிஸ் உயர்கல்வி நிறுவனம் ஆகியவற்றில் உரையாற்றி யுள்ளார்.
75 எம்.ஃபில்., 19 முனைவர் பட்ட மாணவர்களுக்கு நெறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
தமிழியல், செவ்வியல், மொழியியல், அகராதி கள், நாவாய், நாஞ்சில், ஆய்வியல் முறைமைகள்,
பல ஆய்வுப் புத்தகங்கள், சொற்றொகுதிகள் என்று பன்முக நோக்கில் அமைந்த இருபத்தோரு நூல்களை
ஆக்கித் தந்துள்ளார். பெரும்பாலான நூல்களைப் பதிப்பாசிரியராக இருந்து வடி வமைத்துள்ளார்.