பேராசிரியர் ஞா.ஸ்டீபன்

பேராசிரியர் ஞா.ஸ்டீபன்

Profession அறிஞர்

Biography

நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் கன்னியாகுமரி விளவன்கோடு கருங்கல்லில் பிறந்தார். தந்தை:
சா.ஞானசெல்வமணி, தாயார்: சு.சொர்ணத்தங்கம்.

மார்த்தாண்டம் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலைப் (தமிழ்) பட்டம், பாளையங் கோட்டை தூய
சவேரியர் கல்லூரியில் முதுகலைப் (தமிழ்) பட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியர்
கல்லூரியில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

சென்னையில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில் ஆய்வு உதவியாளராக 1985-இல் வேலையில்
சேர்ந்தார். 1992-இல் பாளையங்கோட்டை தூய சேவியர் கல்லூரியில் உள்ள நாட்டார் வழக்காற்றியல்
துறை ஆய்வு மையத்தில் களப்பணியாளராகவும், 1994-இல் ஆவணக் காப்பாளராகவும், 1995 முதல்
1998 மார்ச் வரை நாட்டார் வழக்காற்றியல் துறையில் தற்காலிக விரிவுரையாளராகவும் திறம்பட
செயலாற்றினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழியல் துறையில் 20.04.1998-இல்
விரிவுரையாளராகச் சேர்ந்தார். இவரது கல்விப் பணியைப் பாராட்டி மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக் கழகம் 2010-இல் ‘சிறந்த கல்வி யாளர்’ விருது வழங்கி சிறப்பித்துள்ளது. அதே
ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் இவருக்கு ‘நா.வானமாமலை நினைவு இலக்கிய விருது’
வழங்கியுள்ளது.

105 சிறப்புச் சொற்பொழிவுகளை பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் ஆற்றி
யிருக்கிறார். 12 தேசியக் கருத்தரங்குகளுக்கு ஒருங் கிணைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

பல்வேறு ஆய்வுத் திட்டங்கள், மேலை நாட்டு நண்பர்களின் ஆய்வுப்பணி என பல்வேறு
நோக்கங்களுக்காக தமிழ்நாடு முழுவதும் கேரளா, கருநாடகா, ஆந்திர மாநிலங்களின் சில
பகுதிகளிலும் கள ஆய்வுகள் செய்துள்ளார். மாணவர்களின் களஆய்வுகளிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவ்வாறாக பதினான்கு ஆண்டுகள் களஆய்வு செய்திருக்கிறார்.

பேரா.ஞா.ஸ்டீபன், ‘கொக்கறை: காணிக்காரர் வாழ்வும் வழிபாடும்’, ‘தமிழ்ச் சமூகத்தில் வாய்
மொழிக் கதைகள்’, ‘தொல்காப்பியமும் இனவரை யியல் கவிதையியலும்’, ‘அமைப்பியல் கோட் பாடும்
ஆய்வுகளும்’ ஆகிய நூல்களை எழுதி யுள்ளார். இந்நான்கு நூல்களும் தமிழ் ஆய்வு வரலாற்றில்
ஆய்வாளர்களின் சிந்தையை மாற்றியமைக்கும் கருத்துகள் மிகுந்திருப்பதைக் காணமுடிகிறது.
அதோடு சிறியதும் பெரியது மான 56 ஆய்வுக் கட்டுரைகளை பல்வேறு கருத் தரங்குகளிலும்
இதழ்களிலும் வெளியிட்டிருக் கிறார். ஏழு நூல்களைப் பதிப்பித்திருக்கிறார். இதில்
‘பண்பாட்டு வேர்களைத் தேடி’ என்ற நூல் நாட்டார் வழக்காற்று ஆய்வாளர்களுக்கு பெரிய
வழிகாட்டியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.