| Profession | அறிஞர் |
|---|
சேலம் சலகண்டபுரத்தில் தா.முத்து – பாப்பாயம்மாள் தம்பதியருக்கு பிறந்தார்.
பரமத்தி வேலூர், கந்தசாமி கவுண்டர் கல்லூரியில் பி.ஏ. தமிழ் இலக்கியம் பயின்றார்.
இவருக்கான கல்விக் கட்டணத்தையும், விடுதிக் கட்டணத்தையும் கல்லூரி முதல்வர்
பொ.சண்முகசுந்தரம் செலுத்தி உதவினார். அது மட்டுமல்ல, சென்னை பச்சையப்பன் கல்லூரியில்
எம்.ஏ. (தமிழ்) படிப்பதற்கும் உதவினார்.
சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் அ.மு.பரமசிவானந்தம் அன்புக்குரியவர் ஆனார்.
எம்.ஏ.வில் முதல் தர மாணவராகத் தேர்ச்சி அடைந்தார். அதே கல்லூரியில்
பேராசிரியராக்கினார் (1971).
1979-இல் பேரா. அ.மு.ப.வின் வழிகாட்டு தலில் ‘தமிழில் மேடை நாடகங்கள்’ எனும் தலை
பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இவரது திருமணம் பேரா. பா.ரா.கந்தசாமி தலைமையில் தமிழ் முறையில் நடைபெற்றது.
துணைவியார்: நளினி. இவர்களுக்கு குறிஞ்சி, முத்துக்குமரன் என இரு குழந்தைகள்.
நூம்பல் கிராமத்தில் ஒரு வீடு வாங்கி குடியேறினார். ஒரு ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில்
பகுதி நேரமாகப் பணியாற்றினார். ஐ.ஏ.எஸ். பயிற்சி மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக ஒரு
வீட்டினை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவர்களுக்காக ஒரு நூலகத்தையும் உருவாக்கித் தந்தார்.
அந்த கிராமம முழுவதும் ஐ.ஏ.எஸ். மாணவர்கள் தங்கிப் படித்தனர். இவரது பணியைப் பாராட்டும்
வகையில் ‘ஐ.ஏ.எஸ்.ஸை உருவாக்கும் அதிசயக் கிராமம்’ என்றொரு கட்டுரையை ‘தினமணி’
இவருடையப் படத்துடன் வெளியிட்டது. ‘தினமலர்’ நாளிதழிலும் இச்செய்தி வெளியானது.
இவரது வழிகாட்டுதலில் ஒரு மாணவர் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டிருந்தார். அவருக்கான
வாய்மொழித் தேர்வு அன்று இவரது அன்பு மகன் முத்துக்குமரன் மரணம் எய்தினார். அந்தத்
துயரத்திலும் வாய்மொழித் தேர்வை நடத்தி அந்த மாணவரை முனைவராக்கும் பணியை
நிறைவேற்றினார்.
பச்சையப்பன் கல்லூரியில் பணி நிறைவு பெற்றபின், திருக்கழுக்குன்றம் அன்னை தெரசா கலை
அறிவியல் கல்லூரியில் முதல்வராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் சேலம் பெரியார்
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் பணியாற்றினார்.
துணைவேந்தராகப் பணியாற்றிய காலத்தில் மலேசியா சென்று காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்றார்.
சிங்கப்பூர் சென்று அங்கு கல்வி நிறுவனங்கள் செயல்படும் விதத்தைக் கண்டு அறிந்தார். தற்போது
தனது சொந்த ஊரான சலகண்டபுரத்தில் வசித்து வருகிறார்.