| Profession | அறிஞர் |
|---|
புதுக்கோட்டை கீழச்சிவல்பட்டி பி.அழகாபுரியில் தே.வள்ளியப்பன் -சேதுக்கரசி தம்பதியருக்கு
28.10.1950 அன்று பிறந்தார்.
8ஆம் வகுப்பு படிக்கும் போதே ‘என் கனவு’ எனும் முதல் சிறுகதையை எழுதினார். மதுரை
தியாகராசர் கல்லூரியில் பட்டப் படிப்பைப் படித்தார். தொடர்ந்து பிஎச்.டி.,
பி.சி.டி.எச்.இ., சி.ஜெ., சி.ஐ.ஏ., டி.சி.டி. போன்ற பட்டங்களையும் பெற்றுள்ளார்.
ஒன்பது நகரக் கோயில்களை ஆய்வு செய்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்
பெற்றார். ‘நகரத்தார் வளர்த்த சிற்பக்கலை’ என்ற ஆய்வையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில்
சமர்ப்பித் துள்ளார். தேவகோட்டையில் உள்ள சிரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் 1974-இல்
தமிழ் உரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1976-இல் தமிழ் விரிவுரையாளர் ஆனார். 2007
முதல் 2009 வரை தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
மனைவி: வள்ளியம்மை. இவர்களுக்குத் தெய்வானை, அழகம்மை, வள்ளியப்பன், சொக்க லிங்கம் என
நான்கு பிள்ளைகள்.
தேனப்பன் ‘தவளைத் திருமணம்’, ‘சிரிப்புக்குப் படமெடுப்போம்’, ‘ரயில் சிநேகங்கள்’, ‘தன்னம்
பிக்கை முனை’, ‘கருப்புச் சூரியன்’, ‘மீன்கள்’, ‘தேன்கூடு’, ‘பூ விற்ற காசு மணக்கும்’,
‘இருட் டுக்குள் வெளிச்சம்’, ‘நம்பிக்கை’ ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளையும், ‘ஈரமான
ரோஜாக்கள்’ எனும் குறுநாவலையும், ‘சந்தன மரங்கள்’ எனும் புதினத்தையும், ‘கனவு அன்
னங்கள்’, ‘அகப்பைக் கூடு’ எனும் கவிதைத் தொகுதிகளையும், ‘துப்பறியும் சிங்காரம்’ எனும்
நாடகத்தையும், ‘அத்தைக்கு மீசை முளைக்கிறது’, ‘சிரிப்புமழை’ எனும் நகைச்சுவைத்
துணுக்கு நூல் களையும், இரண்டு அறிவியல் நூல்களையும், ‘நேரு மாமா’, ‘வெற்றிச்செல்வர்
எம்.ஏ.எம்.ராம சாமி’ எனும் வாழ்க்கை வரலாற்று நூல்களையும், ‘நேரு நூறு’, ‘நல்லதே
நடக்கும்’ எனும் இரு தொகுப்பு நூல்களையும், இரண்டு திறனாய்வு நூல்களையும் படைத்துள்ளார்.
‘சாவி’ வார இதழ் நடத்திய சிறுகதைப் போட் டியில் இவரது ‘ரயில் சிநேகங்கள்’ சிறுகதை
முதற் பரிசைப் பெற்றது. குழந்தை எழுத்தாளர் சங்கம் நடத்திய அறிவியல் போட்டியில்
‘கணிப்பொறி யின் கதை’ எனும் அறிவியல் சிறுகதை ஏ.வி.எம். வெள்ளிப்பதக்கம், திருச்சி
அந்தியோதயா நடத்திய சுற்றுச் சூழல் பாதுகாப்புப் போட்டியில் ‘உயிர்காக்கும் மரங்கள்’
சிறுகதைக்கு முதல் பரிசு, ‘ஒன்பது நகரக் கோயில்கள்’ எனும் திறனாய்வு நூலுக்கு ராசா
சர் அண்ணாமலை செட்டியார் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இவரது கட்டுரைகளும் தங்கப்
பதக்கம் போன்ற பரிசு களைப் பெற்றுளள்ளார்.
குன்றக்குடி அடிகளார், கி.ராஜநாராயணன் போன்றோர் இவரது எழுத்துத் திறனையும் நகைச்சுவை
உணர்வையும் பாராட்டிக் கூறினர்.